பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. அமெரிக்கத் தலைநகரில் உள்ளவை

அமெரிக்க ஐக்கிய நாடுகட்கு வந்து அவற்றின் தலைநகரையும் அங்கு அமைந்துள்ள முக்கிய இடங்களையும் பார்க்காமல் செல்வது உசிதம் அல்ல என்று என் மகன் கருதி எங்களை ஒருநாள் வாஷிங்க்டன் (டி.சி) என்ற தலைநகருக்குச் செல்லத் திட்டமிட்டான். அதன்படி புறப்படுகின்றோம்.

வாஷிங்க்டன் (டி.சி):நியுயார்க் எங்கள் இருப்பிடத்திலிருந்து 280 கல் தொலைவிலுள்ளது. மாரிலாந்தில் (20வது மாநிலம்) அமைந்துள்ளது. நமது டில்லி மாநகரைப் போல தனி ஆட்சி அமைப்பில் உள்ளது. 1800 லிருந்து காங்க்ரெசின் இருப்பிடமாக இருந்து வருகின்றது. என் மகனுக்கு அடுத்த நாள் பணி இருப்பதனால், காலையில் சென்று மாலை அல்லது இரவே திரும்ப வேண்டிய நிலை. கடுமையான பயணம்.

8. 10, 02 (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்குப் புறப்பட்டோம். எங்கள் விருப்பப் பழக்கமான உணவு எங்கும் கிடைக்காத நிலையில் சிற்றுண்டி, பகலுணவு, தேவையான குடிநீருடன் சென்றோம். நடுவழியில் சிற்றுண்டி உண்டு பயணமானோம். 11-30 மணியளவில் ஊரைச் சென்றடைந்தோம்.

வாஷிங்க்டன் அமெரிக்க ஐக்கியநாடுகளின் தலைநகரம். நமக்கு டில்லி தலைநகரமாக இருப்பதுபோல. இங்கு அரசுக்குரிய பல்வேறு கட்டடங்கள், அருங்காட்சியகங்கள், பல்வேறு வகைப்பட்ட நினைவுச் சின்னங்கள் முதலியவை நிறைந்துள்ளன. சுமார் ஆறு இலட்ச எண்ணிக்கைக்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு அமெரிக்க நாகரிகம் தொடக்கம் முதல் இன்றுவரை பல்வேறு வகையாக விரிந்த நிலையில் பன்னிறங்காட்டியில்” உள்ளவைபோல் பிரதிபலிக்கின்றது. இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு போகவர 560 கல் (280 + 280) பயணம் செய்து அன்றே திரும்ப வேண்டுமென்றால் நினைத்துப் பாருங்கள். காரை ஒட்டிவரும் என் மகன் படும் சிரமத்தை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. அவன் படும்பாட்டைப் பார்த்துக்கொண்டே தான் அன்றிரவு 12 மணியளவில் பயணமும் இனிதாக(!) முடிந்தது.

சுறுசுறுப்பாக மக்கள் கார்களில் பயணம் செய்யும் இக்காலத்தில் தலைநகரில் காரை நிறுத்துவது, அதுவும் நாம் விரும்பும் இடத்தில்

1. Washington (D.C.); D.C - District of Columbia 2. Kaleidoscope