பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174 ◆ என் அமெரிக்கப் பயணம்

 (18) தேசிய உயிர்க்காட்சி பூங்கா': [1]புல்வெளியாலமைந்த 163 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த இப்பூங்கா உலகிலேயே மிக அருமையான உயிர்க்காட்சி பூங்காக்களில் ஒன்று. இது பல்வேறுபட்ட பிராணிகளையும் தாவர வகைகளையும் கொண்டது. பெரிய கறுப்பு-வெள்ளை சீனக்கரடி போன்ற மெய்சியாங்[2], டியான்டியான்[3]’ என்ற பிராணிகள்தாம் கூட்டங்களை ஈர்க்கின்றன. இவைதவிர, ஒரு யானைக்கன்று, வெப்பமூச்சு விடும் கோமொண்டோ டிராகன் ஜோடி’, [4]குட்டியுடன் கூடிய சுமத்ரா புலிகள்’[5] ஆகியவையும் தனிப்பட்ட சிறப்பான பிராணிகளாகும். காட்டெருமை போன்ற வடஅமெரிக்கப் புல்வெளி வாழ் பிராணிகளும் உள்ளன. கட்டடம் முற்பகல் 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் மைதானம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வாையிலும் திறந்திருக்கும். கார்நிறுத்த 4.50 டாலர்.

(19) உட்ரோ வில்சன் இல்லம்’[6] தலைவர் வில்சன் 1921-ல் வெள்ளை மாளிகையினின்றும் வெளியேறி இந்த ஜார்ஜோனிய நகர் இல்லத்தில் வாழ்ந்தார். இதுதான் தலைநகரின் தலைவரின் ஒரே ஒர் அருங்காட்சியகமாகும். உணவு கொள்ளுங்கால் வில்சன் தரிக்கும் மேல்சட்டை, கால்ஃப் விளையாடும் தடி உட்பட பல்வேறு நினைவுப் பொருள்களின் சேகரிப்பும் இங்கு காட்சிக்கு வைக்கப் பெற்றுள்ளன. செவ்வாய் முதல் ஞாயிறுவரை முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை திறந்திருக்கும். கட்டணம் பெரியவர்கட்கு 5 டாலர், முதியவர்கட்கு 4 டாலர் மாணவர்கட்கு 2.50 டாலர்.

(20) ஆர்லிங்க்டன் தேசிய கல்லறை': [7]பெரும்பாலும் இஃது அமைந்த நிலப்பகுதி முதலில் ஜெனரல் ராபர்ட் இ. லி’ [8]என்பாரின் குடும்பத்தினருக்குச் சொந்தமானதாக இருந்தது. இவர்தம் உயர்ந்த பெருமைவாய்ந்த ஆர்லிங்க்டன் இல்லம் இன்றும் 612 ஏக்கர் சொத்தில் நிலையாக உள்ளது. இந்தக் கல்லறையில் ஆயிரக்கணக்கான போர்ப்பெரு வீரர்களும் சேலஞ்சர்’[9] என்ற விண்வெளி சிறுதொலைக் கலன்களின் விமானிகளும் புதைக்கப் பெற்றுள்ளனர். கென்னடி கல்லறை இடங்கள் - இங்கு ஆதியும் அந்தமும் இல்லா சுடரால் அமைந்த கென்னடியின் கல்லறை அவர்தம் துணைவி ஜேக்குலின் கென்னடி ஒனாலிஸ்[10]ஸின் கல்லறையினை


  1. 28. National Zoological Park
  2. 29. Mei Xiang
  3. 30. Tian Tian
  4. 31. Komondo dragon pair
  5. 32. Sumatran tigers
  6. 33. Woodrow Wilson House
  7. 34. Arlington National Cemetry
  8. 35. General Robert E. Lae
  9. 36. Challenger
  10. 37. Jacquelime Kennedy Onassis