பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவ்வாய்ப்புகளில் பணி குந்தகமின்றி நடைபெற அருள்வார்கள் என்றும், அச்சேறும் நிலையில் இருக்கும் ‘திருப்பாவை விளக்கம்’, ‘ஐந்து இரகசியங்கள்’, ‘அர்ச்சிராதி’ என்ற மூன்று கைப்படிகள் அச்சேறி வெளிவரவும், ‘பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்ய சுவாமிகள்’ என்ற நூல் வெளிவரவும் அவர்களின் அருள் கிட்டும் என்றும் நம்புகின்றேன். இந்நூல்களைப் படிக்கும் தமிழன்பர்களும் தமிழ் ஆர்வலர்களும் என் சார்பாக அவ்விறைவர்களை வாழ்த்தவேண்டும் என்பது என் விண்ணப்பம். இவையெல்லாம் முற்றுப்பெறும் வரை என் நுகர்வினை நீண்டிருக்கும் என்பதும் என் உறுதியான நம்பிக்கை.