பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178 ◆ என் அமெரிக்கப் பயணம்



பெருமானின் தெய்விக வாக்கின் மறுபக்கமும் அதுதானே! என் வாழ்வில் அறிவுடைமையமைவதற்கு செய்த முயற்சியைப் போல் செல்வம் திரட்டுவதில் செய்யவில்லை. திருப்பதியில் இப்படிப்பட்ட முயற்சியின்மையினால் சில ஆயிரம் வெண்பொற்காசுகள் இழந்தமை நினைவிற்கு வருகின்றது.

சிறு வயதில் கற்கும்போது ‘அறிவு ஆற்றலைத் தருவது”[1] என்ற பொன்மொழிதான் கல்லூரியில் அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுக்கச் செய்தது. இதுவே திருப்பதியில் பணியாற்றியபோது இடர்களுக்கிடையில் அறிவியல் துறையில் இரண்டு மூன்றாண்டுகள் தங்க நேரிட்டபோது உயிரியல் அறிவியல்களை[2] கற்கத்துண்டியது. அத்துறைகளில் பணியாற்றிய ஆந்திரத்தைச் சார்ந்த பேராசிரியர் ஒருவரும், தமிழகத்தைச் சார்ந்த பேராசிரியர் ஒருவரும் என்னுடைய ஆர்வத்தைக் கண்டு மிக்க விருப்பத்துடன் உதவினார்கள். அடிக்கடி எழும் ஐயங்களை அகற்றினார்கள். இதனால் அத்துறைகளில் அடிப்படை அறிவு ஏற்பட்டு அத்துறைகளைத் தானாகக் கற்கும் நிலை ஏற்பட்டது. பிற்காலத்தில் வள்ளுவத்தில் ஈடுபாடு கொண்டு கற்கும்போது அறிவு அற்றம் காக்கும் கருவி” (குறள்-421) என்ற பொய்யாமொழியாரின் பொன்மொழி ஒரு மின்னொளியைக் காட்டி என் மன நிலையில் உறுதி ஏற்படச் செய்தது. இன்றுவரை அறிவியல்துறை நூல்களைக் கற்பதும் என் இரண்டாம் இயல்பாக[3] அமைந்தது. பொது மக்களுக்கு எட்டும் முறையில்தான் அறிவியல் நூல்களிலுள்ள பல சமயக் கருத்துகளைப் பாமரர்களும் அறியும் வண்ணம் எளிமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இப்படியெல்லாம் தமிழ்ப்பணி, சமயப்பணி என்ற தெய்வப் பணிகளை அமெரிக்காவில் இருந்துகொண்டு செய்ய முடியுமா ?

முறையாக ஊதியம் பெற்று பணியாற்றியதிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு பல கெளரவப் பணிகள் வந்தன. அவற்றிலெல்லாம் மிக்க ஆர்வத்துடன் பணியாற்றி பல்லோர் வியக்கும் வண்ணம் பல்வேறுதுறைகளில் பொதுவிருப்ப நூல்களைப் படைத்து தமிழ்மொழியை வளமாக்கி வருகின்றேன். இப்பணிகளில் என் தீயூழால் இடர்கள் ஏற்பட்ட பொழுதெல்லாம், மனத்துாய்மையுடன் வினைத்துய்மையும் இருந்தமையால் என் இதய கமலத்தில் நிலையாக எழுந்தருளியிருக்கும் விநாயகப்பெருமானும் “வேங்கடமேய விளக்கும்’, ‘தண்டமிழ் முருகனும் - மாமனும் மருகனும் - என் முன்னின்று அவற்றை நீக்கி எனக்கு உதவுகின்றனர் என்பது என் அதிராத நம்பிக்கை.

சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத்துறையிலும், மரபுவழிப் பண்பாட்டுத் துறையிலும் பணியாற்ற வாய்ப்புகளையளித்த இறைவர்கள்


  1. 2. Knowledge is power
  2. 3. Biological Science
  3. 4. Second nature