பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


நூல் முகம்

சச்சிதா னந்த வடிவம்நம் வடிவம்
தரும்அதிப் பினம்மற் றிரண்டும்
பொய்ச்சிதா காசக் கற்பனை இவற்றைப்
போக்கியாங் கவ்வடி வாகி
அச்சிதா கார போதமும் அதன்மேல்
ஆனந்த போதமும் விடுத்தல்
மெய்ச்சிதாம் வீடென் றுரைத்தினை சித்தி
விநாய விக்கினேச் சுரனே![1]}}

கலைபயின்ற வளத்தினுக்கும் கரும்பினைமுக்
கனியைஅருட் கடலை ஓங்கும்
நிலைபயின்ற முனிவரரும் தொழுதேத்த
நான்முகனார் நீண்ட நாவின்
தலைபயிரை மறைபயின்று மூவுலகும்
காக்கின்ற தாயை வாகைச்
சிலைபயின்ற நுதலாளைக் கலைவாணி
அம்மையைநாம் சிந்திப்போம்![2]

‘ஆற்று நீர்வழிப் படுஉம் புணைபோல்
முறைவழிப் படுஉம் ஆருயிர்’[3]

என்பதற்கிணங்க என் அமெரிக்கப்பயணம் அமைகின்றது. மேலுலகம் செல்ல வேண்டிய வயதில் மேல்நாடு செல்ல வாய்ப்பு வந்தது அந்த இறைவன் திருவருள். இது வினைப் பயனுமாகின்றது.

என் அமெரிக்கப் பயணத்தால் (2002, மார்ச் 30 முதல் ஜூன் 25 வரை) இரண்டரை மாதம் நியுயார்க் மாநிலத்தில் நியுயார்க்கில் என் இளைய மகன்


  1. திருவருட்பா- மூன்றாம், திருமுறை-சித்தி விநாயகர் பதிகம்-6
  2. மேலது-மேலது-கலைமகள் வாழ்த்து-3
  3. புறம்-192