பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் அமெரிக்கப் பயணம்

1. தோரண வாயில்

மானிட வாழ்க்கை, ஏனைய உயிர் வகைகளின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு நோக்கும் போது, விசித்திரமானதாகவும், விநோதமானதாகவும் இருப்பதை அறியலாம். அரும்பாடுபட்டு அறிவியல் கல்விபெற்று அதன் அடிப்படையில் நோக்கினால் இந்த அற்புதமும் விநோதமும் தெளிவாகப் புலனாகும்.

ஊனக்கண்ணுக்குப் புலனாகாத நுண்ணிய ஆண் விந்தணுவிலும், பெண் முட்டையணுவிலும் 23-ஒற்றை நிறக்கோல்கள் அடங்கியுள்ளன. இந்த நிறக்கோல்களில் ஆணிடம் உள்ளவற்றில் சில x-நிறக் கோல்கள் இணைந்தால் பெண்மகவும், y-நிறக்கோல்கள் இணைந்தால் ஆண்மகவும் பிறக்கும். இந்த நிறக்கோல்கள் கருநிலையில் ஆண் உள்ளபோதே விரைகளிலும், கருநிலையில் பெண் உள்ள போதே சூற்பைகளிலும் சேமித்து வைக்கப்பெறும். பெண்பூப்பெய்தும் காலம் வரையிலும் ஆண்முன்குமரப்பருவம் எய்தும் வரையிலும் இவை உறங்கிய நிலையில் கிடக்கும். இப்பருவங்கள் எய்திய பிறகு இவை ஒன்று சேரத்துடிக்கும். இத்துடிப்பே நாம் ‘காதல்’ என்று வழங்குவதாகும். இந்தக் காதலே இந்நிறக்கோல்கள் இணைய வழிவகுக்கின்றது. இவ்வாறு இணைந்த நிலையே கருஉயிரணு நிலை"யாகும். இது நடைபெறும் இடம் கருக்குழல் ஆகும். இதுவே சிறிது சிறிதாக நகர்ந்து வந்து கருப்பையில் புதைந்து குழந்தையாக வளர்கின்றது.

இந்தக் கரு உயிரணுவில் தான் ஆலமர் வித்தில் அருங் குறள் போல்’ ஆலமரம் அடங்கிக்கிடப்பது போல் மனித உருவம் அடங்கிக் கிடக்கிறது. எனவே மனித வாழ்வு சமநிறக்கோல்களைக் கொண்டு தொடங்குகின்றது. ஆகவே, ஒரு குழந்தையின் உடலிலுள்ள உயிரணுவின் நிறக்கோல் இணையில் ஒன்று தந்தையிடமிருந்தும் மற்றொன்று தாயிடமிருந்தும் வந்தவையாகும். உலகிலுள்ள மக்கள் யாவரும் இவ்வாறு பிறப்பெடுத்து பிறந்த

1. Chromosomes 2. Testicles 3. Ovaries 4. Dormant state 5. Germ. Cell 6. Fellopian tube 7. Uterus 8. இத்தகைய கருத்துகளில் மேலும் தெளிவு பெற விரும்புவோர் எனது ‘வாழையடி வாழை

(மணிவாசகர் பதிப்பகம் 87, சிங்கர் தெரு, சென்னை -108) என்ற நூலைக் கற்றுப்பயன்பெறலாம்.