பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அமெரிக்க ஐக்கிய நாடுகள் ♦ 17


8. வானொலி நகர் இசை மண்டபம்[1]: சென்னை இசை அரங்கு[2] போன்ற அமைப்பு இது. இங்கு இசைக் கச்சேரிகள், நாடகங்கள் முதலிய கண்ணுக்கினிய காட்சிகள் நடைபெறும். 5000 பேர் அமர்ந்து பார்க்கலாம்.

9. ஐ.நா.வின் தலைமைச் செயலகம்[3]:

10 பேட்ரிக் தேவாலயம்[4]: 2 ரோமன் கத்தோலிக்கர் வழிபடும் கோயில். சென்னை சாந்தோமில் உள்ளதைப் போன்றது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ளவற்றில் இது ஒன்று. 2400 பேர் ஒரே சமயத்தில் வழிபாடு செய்ய வசதியுள்ள கோயில், ரோஜா சாளரம் 26 அடி குறுக்காக அமைந்தது; குழல் உறுப்பு 2380-க்கு மேற்பட்ட குழல்களைக் கொண்டது. கூர்மையான உச்சியைக் கொண்ட 330 அடி உயரமுள்ள இரட்டைக் கோயில் கோபுரங்கள் 14-வது நூற்றாண்டு கோதிக் கட்டிடப்பாணியை நினைவூட்டுவனவாக உள்ளன. இந்தத் தேவாலயம் உள்நாட்டுப் போருக்கு[5] முன்பே தயார் நிலையில் இருந்தது. ஆனால், போர் முடிவுற்று 14 ஆண்டுகட்குப் பின்னரே திறக்கப்பெற்றது.

10. டவுன் டவுன்[6]: நியுயார்க் தொடக்கக் காலத்தில் உண்டான நகரம் டவுன்[7], நாளடைவில் அதனைச் சுற்றிலும் பல்வேறு கட்டடங்கள் அமைந்து பல்வேறு பகுதிகள் அமைந்த சென்னை தொடக்க காலத்தில் உண்டான நகரம் (Dawn); நாளடைவில் அதை சுற்றிலும் அண்ணாநகர், தி.நகர் போன்ற பல்வேறு பகுதிகள் அமைந்து மிகப் பெரிய நகரமாக உருவானது போல என்று கூறலாம்.

11. சிறிய இத்தாலி[8]: இது இத்தாலியர் வாழும் இடம் அவர்கள் அதிகமாகத் தொழில் செய்யும் இடமும் இதுவே. (சீனநகரின் அருகில் உள்ளது)

12. பிராட்வே தெரு[9]: 150 கல் தொலைவு நீளமாக அமைந்துள்ள தெரு இது.

1. புரூக்லின் புராஸ்பெக்ட் பூங்கா[10]

2. மெக்ராஹில்[11]: நூல் வெளியிடுவோர். உலகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்ட பெரிய நிறுவனம். சென்னை அண்ணாசாலையில் இதன் கிளை அலுவலகம் உள்ளது.


  1. Radio City Music Hall
  2. Music Academey
  3. விளக்கம் இந்நூல் பக்.20 காண்க.
  4. Patrick’s Cathedral
  5. Civil war
  6. Down-Town
  7. Down
  8. Little Italy
  9. Broadway street
  10. Prospect park. விவம் இந்நூல் பக்.55 காண்க.
  11. McGraw Hill