பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 49

குடியேறுவதற்கு மேற் கொண்டிருக்கும் முயற்சிக் குறிப்பையும் தெரிவித்தேன். மேலும், இது குறித்துப் பேசுவதற்கு அவர்கட்கு நா எழவில்லை. நபிகள் நாயகம் சகோதரத்துவக் கொள்கையை எடுத்துக் காட்டி இத்தகைய பெருமானின் சீரிய புனிதக் கொள்கையை மறந்து அடிக்கடி புனிதப் போர்’ பற்றிப் பேச்சு எழுவது மிகவும் வருத்தமாக உள்ளது என்றேன். அதே சமயத்தாரிடையே கூட ஒற்றுமையின்மை நிலவுவதையும், அச்சுறுத்தும் போர்க் குரல்கள் அடிக்கடி எழுவதையும் காணவும் கேட்கவும் மேலும் வருத்தமாக இருக்கிறது என்று சொன்னபோது அவர்கள் வாயடைத்துப் போயினர்.

மற்றொரு நாள் லெபனான்’ நாட்டிலிருந்து பிஎச்.டி. பட்டத்திற்காக ஆய்வு செய்ய வந்திருக்கும் ஒரு மாணாக்கரிடம் பேச்சு கொடுக்க நேர்ந்தது. அவர் ஒரு சிறந்த ஆய்வு மாணாக்கராகக் காணப் பெற்றார். தான் உயிரியல் துறையில் ஆய்வு செய்வதாகவும் குறிப்பிட்டார். எனக்கும் அத்துறையில் ஒரளவு பயிற்சியுள்ளதால் பேச்சு நீண்டது. இரு பெற்றோர்களின் நிறக்கோல்கள்-ஜீன்கள் மூலம் பெற்றோர்களின் சில உடற்கூறுகள்தாம்” கடத்தப்பெறுகின்றனவேயன்றி அறிவுக் கூறுகள் கடத்தப்பெறுவதில்லை என்று குறிப்பிட்டேன் அவர் இன்னும் இத்துறையில் ஆழமாகப் புகவில்லை என்பதை அறிந்து கொண்டேன்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப் புடைத்து’

என்ற குறளின் கருத்தை எடுத்துக் காட்டி விளக்கினேன். அதில் அறிவுக் கூறுகள் கடத்தப்பெறும் குறிப்பு இருப்பதையும் ஆனால், அக் குறிப்பு கற்றுப்புற சூழலைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும் என்றும் விளக்கினேன். அப்படிக் கொள்ளாவிட்டால் ஒரு நீதிபதியின் மகன் நான்காவது படிவம் கூட தாண்ட முடியாதிருப்பதையும், ஒரு கல்லூரிப் பேராசிரியரின் மகன் வகுப்புகள் தோறும் இரண்டு ஆண்டுகள் தங்கிப் போவதையும் எடுத்துக் காட்டி அது வள்ளுவரின் கருத்துக்கு முரண்படுவதைச் சுட்டிக் காட்டினேன். ஆனால், வள்ளுவர் கருத்தை அவ்வளவு எளிதில் புறக்கணிக்க முடியாது என்று குறிப்பிட்டு, பெற்றோர்கள் படித்தவர்களாதலால் அவர்கள் வீட்டுச் சூழ்நிலை படிப்பு பற்றி இருக்கலாம் என்றும், அது தம் குழந்தைகட்குச் சாதகமாக அமையும் என்று கருதி இவ்வாறு கூறியிருக்கலாம் என்றும் விளக்கினேன்.

3. Lebanon 4. Biological Faculty 5. Chromosomes-Genes 6. Physical tracts 7. Intellectual Tracts 8. குறள் - 398 9. Environmental impact