பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 0 என் அமெரிக்கப் பயணம்

ஆனால், இன்று நடைமுறையில் காண்பதென்ன ? வானொலி, தொலைக்காட்சி, வேறு கேளிக்கை வசதிகள் அவர்கள் இல்லத்தில் பெருகியிருப்பதால் அவர்தம் குழந்தைகளில் பெரும்பாலோர் இச்சூழலில் ஈடுபட்டுத் தம் கல்வியைப் பாழாக்கிக் கொள்ளும் நிலையையும் எடுத்துக் காட்டினேன். அவர் மிக்க அக்கறையுடன் என் விளக்கத்தைக் கேட்டறிந்ததை அவர்தம் முகக்குறிப்புகளினின்றும் அறிந்து கொண்டேன். அவர் அடுத்த இரண்டு நாட்கள் கழித்து தாம் பயிலும் செயிண்ட் ஜான் பல்கலைக் கழகத்தில்” உயிரியல் பற்றி ஒரு கருத்தரங்கு” நடைபெறப் போவதைக் குறிப்பிட்டு அதில் கலந்துகொள்ள அழைத்தார். அதில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் பார்வையாளராகக் கூட வருவதற்கு (என். தளர்ந்தநிலையால் தனியாக வருவதற்கு இயலாதென்றும், கூட்டி வருவதற்கு ஒருவரும் இல்லை என்றும் கூறி வாய்ப்பில்லை என்று கூறிவிட்டேன்.

பிறிதொரு சமயம் இந்தப் பூங்காவின் சற்று உயரமான இடத்தில் சின்மயானந்த ஆசிரமத்தைச் சேர்ந்த அமெரிக்கர்கள் சமபந்தி உணவு கொண்டிருப்பதைப் பார்த்தோம். அமெரிக்கப் பெண்கள் இந்தியப் பெண்கள் போல சேலை ஆடையணிந்து கொண்டு இதில் கலந்து கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. இந்தியாவிலிருந்து உலகாயதத்தால்’ உந்தப்பெற்று எண்ணற்ற இந்தியர்கள் பணம் சம்பாதிக்க வந்திருப்பதையும், இங்குள்ளவர்களில் சிலர் ஆன்மிகத்தை” நாடி அதில் ஈடுபட்டிருப்பதையும் நினைத்துக் கொண்டேன். இந்தக் காட்சிகளை நோக்கிய வண்ணம் வீடு திரும்பினோம்.

மேனிலைப்பள்ளி: பூங்காவிற்கு நேர் எதிர்ப்புறம் ஒரு பெரிய மேனிலைப்பள்ளி உள்ளது. எங்கள் இல்லத்திலிருந்து பார்த்தாலே அந்த மாபெரும் கட்டடம் கண்ணில் படும். பள்ளிக்கு முன்புறமாக உள்ள அகன்ற புல்வெளி கண்டோர் கண்ணையும் கருத்தையும் ஈர்ப்பதாகவுள்ளது. சனி, ஞாயிறு இரண்டு நாட்களைத் தவிர, காலை எட்டு மணி முதல் மாணாக்கர்கள் வரிசைவரிசையாக இப்பள்ளிக்கு வருவதைப் பார்க்கலாம். பள்ளி பிற்பகல் சுமார் 2.30 மணிக்கு முடிவடைகின்றது. (படம் - 8)

நம்மூரில் இடநெருக்கடி இருப்பதுபோல இங்கும் இட நெருக்கடி உண்டு. மாலை நேர வகுப்புகளும் இங்கு நடைபெறுகின்றன. மாலை நான்கு மணி முதல் மாணாக்கர்கள் திரள்திரளாக இங்கு வருவதைக் காணலாம். இரவு ஒன்பது மணிக்கு மாணாக்கர்கள் கலைந்து போவதையும் பார்க்கலாம்.

10, St. John’s University 1 1. Seminar 12. Materialism 13. Spiritualism