பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 0 என் அமெரிக்கப் பயணம்

4. ஷியா விளையாட்டுப் பார்வை அரங்கு: இங்கு பந்தடி மட்டை கொண்டு விளையாடும் பேஸ்பால் விளையாட்டுத் தொடர்கள் நடைபெறும் இடம் இது. தனியாருக்குரியது.

5. குயின்ஸ் அருங்காட்சியகம்': இது மிகச்சிறியது. நாங்கள் நுழைந்து பார்க்கவில்லை.

ஏரியில் செல்ல படகு வசதிகள் உண்டு. கட்டணங்கள் செலுத்தி ஏறிச் கற்றலாம். சில இடங்களில் சிறுவர்கள், குழந்தைகள் விளையாடுவதற்கு ஊஞ்சல் அமைப்புகள், சறுக்கி விளையாடும் அமைப்புகள், ஏறி இறங்கி விளையாடும் அமைப்புகள் பல உள்ளன. (பெரிய பூங்காவாதலால்).

சுற்றிலும் பெரிய பெரிய மரங்கள் தோப்புகள் போல் அடர்ந்து உள்ளன. ஆங்காங்கு நடந்து சென்று பார்க்கும் பாதை வசதிகளும், அமர்ந்து ஒய்வு கெள்ளும் வசதிகளும் உள்ளன. சிறுவர்கள் ஆங்காங்கு விளையாடிக் கொண்டிருப்பதையும், பெரியவர்கள் நடந்து சென்று கொண்டிருப்பதையும், சிலர் அமர்ந்து ஒய்வாக இருப்பதையும் கண்டு மகிழ்ந்தோம்.

பெரிய இடமாதலால் காரிலேயே இருந்து பார்த்துக் கொண்டு சுற்றிவந்தோம். காரிலிருந்து இறங்கிப்பார்க்க விரும்பவில்லை. உடல்தளர்ச்சி இடங்கொடுக்கவில்லை.

(3) மத்தியப் பூங்கா; இதனைப் பார்க்க மே 4, சனியன்று காலை 10.00 மணிக்குப் புறப்படுகின்றோம். எம்பயர் கட்டடம் கண்ட அன்று இதனைப் பார்க்க எழுந்த ஆர்வம் இன்று நிறைவேறுகின்றது. இது இல்லத்திலிருந்து சுமார் 12 கல் தொலைவிலுள்ள மான்காட்டன் பரோவில் உள்ளது. நியூயார்க் மாநிலத்தில் அனைத்திலும் மிகப் பெரியது (படம்-9); 850 ஏக்கர் பரப்புடையது. செயற்கை முறையில் நிறுவப்பெற்ற அற்புதப்பூங்கா; அழகெலாம் திரண்டு அமைந்த அரிய பூங்கா.நீண்ட சதுர வடிவில் அமைந்தது. இதன் நீண்ட பக்கம் ஒன்று முதல் 240 எண் வரை அமைந்துள்ள தெருக்களில் 51-வது எண்ணுள்ள தெருவில் தொடங்கி 110-வது எண்ணுள்ள தெரு வரை நீண்டு அமைந்துள்ளது. குட்டைப் பக்கம் ஒன்று முதல் 12 எண்வரை அமைந்துள்ள அவின்யூ பெருந்தெருவில் 5-வது அவின்யூ தெரு தொடங்கி 8-வது அவின்யூ தெரு முடிய அமைந்துள்ளது. இதன் பராமரிப்பில் ஆயிரக் கணக்கான மக்கள் பங்கு பெற்றுள்ளனர். இவர்களது கார்களைத்தவிர பிறர் கார்கள்

6. Base Ball Tournament 7. Queen’s Museum

Central Park.

2. போர்க் கப்பல்கள் (Wa Ships) மான்காட்டனில் 12-வது அவின்யூவின் இறுதியிலும், 46-வது தெருவின் கோடியிலும் நிறுத்தப் பெற்றுள்ளன (இவை பற்றிய விவரங்கள் போர்க் கப்பல்கள் பற்றிய விவரங்கள் தரும் இடத்தில் கண்டு தெளிக. (இந்நூல் பக்கம் 66).

1.