பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 0 என் அமெரிக்கப் பயணம்

நாங்கள் சென்ற அன்று காற்றுவீசி குளிர் அதிகமாக இருந்தமையால் இறங்காமல் காரிலிருந்தபடியே சுற்றிப்பார்த்துவிட்டுத் திரும்பினோம். வழியில் வீடு கட்டும் பல்வேறு சாமான்கள் விற்கும் இடம் சென்று பார்வையிட்டு ஒருசில சாமான்களை வாங்கிக் கொண்டு கணபதி கோயில் சென்று வழிபாடு முடித்துக் கொண்டு வீடு திரும்பினோம்-இரவு 8.30 மணி அளவில்.

3. அருங்காட்சியகங்கள்

அமெரிக்காவில் என் மகனுடன் நியுயார்க் இல்லத்தில் தங்கியிருந்த போது இரண்டு அருங்காட்சியகங்களைப் பார்க்க நேர்ந்தது.

(1) அமெரிக்க அருங்காட்சியகம் (இயற்கை வரலாறு): மான்காட்டனிலுள்ள இதனைப் பார்ப்பதற்கு (மே 26, ஞாயிறு) முற்பகல் 11.30 அளவில் நான், என்துணைவி, மகன் டாக்டர் இராமகிருஷ்ணன், மருமகள் விசயலக்குமி ஆகிய நால்வரும் சென்றோம். கார்நிறுத்துவது பெரும்பாடாய் விட்டது. தெருக்களைச் சுற்றிச்சுற்றி அலைந்து இறுதியில் ஒரிடம் கிடைத்தது. அங்குக் காரை நிறுத்திவிட்டு அருங்காட்சியத்திற்கு வருகின்றோம். பெரிய இடம்; சுற்றுவதற்கு எங்களால் இயலாது. ஆதலால், இரண்டு சக்கர நாற்காலிகள் வாங்கப்பெற்றன (இவற்றிற்குக் கட்டணம் இல்லை) மகனும் மருமகளும் நாங்கள் அமர்ந்த நிலையில் தள்ளிக் கொண்டுவர சுற்றிப் பார்த்தோம். இந்தக் காட்சியகம் நான்கு தளங்களில் 42 மண்டபங்களில் அமைக்கப் பெற்றுள்ளது. சக்கர நாற்காலிகளுடன் தளங்களுக்கு ஏறுவதற்கும் இறங்குவதற்கும் மின்விசை ஏற்றங்கள் உண்டு. சுற்றிப் பார்ப்பதற்கு விசாலமான வழுவழுப்பான தரைகள்; சிரமம் இல்லாமல் நடந்து சுற்றலாம். காட்சிப் பொருள்கள் அக்காலங்களில் அவை இருந்த இயற்கைச் சூழலிலேயே அமைக்கப் பெற்றிருந்தமை அற்புதம். விண்வெளிக் காட்சிகளைக் காண்பதற்கு தனிப்படக் காட்சிசாலை உள்ளது. அதற்குத் தனிக் கட்டணம் உண்டு. அதனைப் பார்த்தால், ஏனையவை பார்க்க முடியாத நிலை ஏற்படும் என்று நாங்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

5. Home Depot 1. g Frederick and Phineas and Sawdra Priest Rose Centre for Earth and Space - என்ற கட்டடத்தில் அமைந்திருந்தது. இது சில நாட்களுக்கு முன் பார்த்த மத்திய பூங்கா (Central Park) என்ற இடத்தில் தான் உள்ளது. முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 5.45 வரை திறந்திருக்கும். வயது வந்தோருக்கு 10 டாலர், முதியோருக்கு 7% டாலர். 2. Wheeled Chairs 3. Lift 4. Natural Environment 5. Theatre