பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ix

பல ஆண்டுகளுக்கு முன்‌ திராவிட மொழிகளின்‌ அமைப்பைப்‌ பற்றிக்‌ கால்டுவெல்‌ என்ற ஆங்கிலேயர்‌ அழகான நூல்‌ ஒன்று எழுதினார்‌. "திராவிட மொழிகளின்‌ ஒப்பியல்‌” (Comparative phillology of Dravidian Languages) என்பது அந்தநூலின்‌ பெயர்‌. அதை இன்னும்‌ சிறந்த நூலாகப்‌ புலவர்கள்‌ கொண்டாடுகிறார்கள்‌. அனத எழுதினவருக்கே எட்டுத்‌ தொகை, பத்துப்‌பாட்டு அகியவை கிடைக்கவில்லை. அந்‌நூல்களின்‌ அமைப்பை அவர்‌ அறியார்‌.

இன்றோ சங்ககாலத்‌ தமிழரைப்‌ பற்றியும்‌, நூல்களைப்‌ பற்றியும்‌ பல பல நூல்கள்‌ வந்திருக்கின்றன. பல வகையான ஆராய்ச்சிகள்‌ நிகழ்ந்து வருன்றன. தமிழ்‌ இலக்கியத்தின்‌ பொற்காலம்‌ என்று சங்க காலத்தைப்‌ போற்றிப்‌ பாராட்டிப்‌ பெருமிதத்துடன்‌ பேசுகிறோம்‌. தமிழர்‌ பண்பாடு, தமிழர் நாகரிகம்‌, தமிழர்‌ மரபு என்று நமக்குரிய தனிச்‌ சிறப்பைப்‌ பல மேடைகளில்‌ புலவர்‌ பெருமக்கள்‌ பேசுகிறார்கள்‌; எழுதுகிறார்‌கள்‌. பாரத நாட்டில்‌ உயிருடன்‌ வழங்கிவரும்‌ மொழிகள்‌ யாவற்றிலும்‌ பழையது, இலக்கிய வளம்‌ பொருந்தியது, இலக்கண வரம்புடையது, எதையும்‌ வழங்கத்தக்க சொல்‌ வளமுடையது என்றெல்லாம்‌ மற்றவர்களும்‌ ஒப்புக்‌ கொள்ளும்‌ நிலை தமிழுக்குக்‌ இடைத்திருகிறது.

தமிழ்த்‌ தாத்தாவின்‌ அரும்பெருந்‌ தொண்டே இத்தனை உயர்வுக்கும்‌ மூலகாரணம்‌ என்பதைத்‌ தமிழ்ப்‌ புலவர்கள்‌ அறிவார்கள்‌. தமிழ்‌ வரலாற்றில்‌ ஐயரவர்களுக்கு என்று ஒரு தனிப்பகுதி இருக்கும்‌ என்பதில்‌ சந்தேகமே இல்லை.

ஐயரவர்களுடைய ஊர்‌ தஞ்சை ஜில்லாவில்‌ உள்ள உத்தமதானபுரம்‌ என்ற சிறிய கிராமம்‌, சங்கீத வித்துவானாகிய ஸ்ரீ வேங்கட சுப்பையருக்கும்‌ ஸ்ரீமதி சரஸ்வதியம்மாளுக்கும்‌ புத்திரராக ஐயரவர்கள்‌. பிறந்தார்கள்‌. அவர்களுடைய கதந்தையார்‌ பல இடங்களுக்குச்‌ சென்று தம்முடைய இசைத்‌ திறமையைக்‌ காட்டி ஊதியம்‌ பெற்று வாழ்ந்து வந்தார்கள்‌. குறிப்பிட்ட வேலையும்‌ குறிப்பிட்ட சம்பளமும்‌ இல்லாவிட்டாலும்‌ அக்காலத்தில்‌ வாழ்ந்த மக்களின்‌ அன்பும்‌ கலையபிமானமும்‌ அவரைப்‌ போன்ற கலைஞர்களைப்‌ பாதுகாத்து வந்தன. அங்கங்கே இருந்த செல்வர்களும்‌ ஜமீன்‌தார்களும்‌ அவருக்குச்‌ சிறப்புச்‌ செய்து, வாழ்க்கையைச்‌ சுவையுடையதாக்கினார்கள்‌. இந்தச்‌ சூழ்நிலையில்‌ ஐயரவர்கள்‌ வளர்ந்து வந்தார்கள்‌. தந்தையாரிடமும்‌ சில திண்ணைப்‌ பள்ளிக்கூடத்து ஆசிரியார்களிடமும்‌ இப்பேரறிஞர்‌ இளமையில்‌ கல்வி பயின்றார்‌. அக்காலத்தில்‌ சில நூல்களையே குற்றிருந்‌-