பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

x

தாலும்‌, அவற்றைத்‌ இிருத்தமாகப்‌ பயின்று, மற்றவர்களுக்கும்‌ தெளிவாகப்‌ பாடம்‌ சொல்லும்‌ சிறிய புலவர்கள்‌ அங்கங்கே இருந்தார்கள்‌. அத்தகையவர்களாகிய அறியிலூரச்‌ சட்கோபையங்கார்‌, செங்கணம்‌ விருத்தாசல ரெட்டியார்‌ முதலியவர்களிடம்‌ ஐயரவர்கள்‌ சில நூல்களைக்‌ கற்றார்கள்‌. ஐயரவர்களுடைய தத்தையாருக்குத்‌ தம்‌ குமாரரைப்‌ பெரிய சங்கீத வித்துவானாக ஆக்கவேண்டுொன்ற ஆசையே முதலில்‌ எழுந்தது. ஆனால்‌ இவர்களுக்குத்‌ தமிழில்‌ உண்டான பெரும்‌ பசியைக்‌ கண்டபோது அந்தத்‌ துறையில்‌ இவர்களை ஈடுபடுத்துவதுதான்‌ தம்முடைய கடமை என்பதை அவர்‌ உணர்ந்தார்‌. அதனால்‌ எங்கெங்கே தமிழ்‌ நூல்களைப்‌ பாடம்‌ சொல்லுகிறவர்கள்‌ இருக்கிறார்களோ. அந்த அந்த ஊர்களுக்கெல்லாம்‌ குடியேறித்‌ தம்முடைய குமாரர்‌ தமிழ்தக் கல்வி பெறும்படி செய்துவந்தார்‌.

அப்போது திருவாவடுதுறை ஆதினத்தில்‌ பெருங்‌ கவிஞராகவும்‌ சிறந்த புலவராகவும்‌ திகழ்ந்த மகாவித்துவான்‌ மீனாட்சிசுந்தரம்‌ பிள்ளையவர்களின்‌ புகழ் தமிழ்நாடு முழுவதும்‌ பரவியிருந்தது. அவர்‌ பல மாணாக்கர்களுக்குப்‌ பாடம்‌ சொல்லிக்‌ கொடுத்து வருகிறார்‌ என்ற செய்தி ஐயரவர்களின்‌ தந்தையார்‌ காதில்‌ விழுந்தது, "நம்‌ பிள்ளையையும்‌ அந்த மகாவித்துவானிடம்‌ சேர்த்துவிட வேண்டும்‌" என்ற ஆவல்‌ அவருக்கு உண்டாயிற்று.

1870ஆம்‌ அண்டு. ஏப்ரல்‌ மாதம்‌ ஐயரவர்கள்‌ வாழ்க்கையின்‌ இரண்டாம்‌ பகுதி தொடங்கியது. மாயூரத்தில்‌ இருந்த மகாவித்துவான்‌ மீனாட்சிசுந்தரம்‌ பிள்ளையவர்களிடம்‌ இவர்கள்‌ மாணாக்கராகச்‌ சேர்ந்தார்கள்‌. அதுமுதல்‌ அந்தத்‌ தமிழ்க்‌ கடலின்‌ மறைவு வரையில்‌ (1.2.1876) உடனிருந்து பலவகையான தமிழ்‌ நூல்களைக்‌ கற்றார்கள்‌. அப்புலவர்பிரான்‌ அவ்வப்போது இயற்றிவந்த நூல்களை எழுதுவதும்‌ திருவாவடுதுறை மடத்தின்‌ ஆதினகர்த்தர்களாக இருந்த ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடன்‌ பழகுவதும்‌, அந்த மடத்துக்கு வரும்‌ தமிழ்ப்‌ புலவர்களிடத்திலும்‌ வடமொழிவாணரிடத்திலும்‌ சங்கேத வித்துவான்‌௧ளிடத்திலும்‌ நெருங்கிப்‌ பழகுவதும்‌ போன்ற செயல்களால்‌ இவர்களுக்கிடைத்த அநுபவம்‌ வேறு யாருக்கும்‌ கிடைத்தற்கு அரிது. அத்தகைய அநுபவத்தினால்‌ ஐயரவர்கள்‌ பெற்ற பயன்‌ மிக அதிகம்‌ எந்தப்‌ பொருளானாலும்‌, எத்தகைய மனிதரானாலும்‌, எந்தவிதமான நிகழ்ச்சியானாலும்‌ கூர்ந்து உணரும்‌ இயல்பு ஐயரவர்களிடம்‌ சிறந்திருந்தது. அதனால்‌ அக்காலத்தில்‌ அவர்கள்‌ கண்டவையும்‌ கேட்டவையும்‌ அப்படியப்படியே இவர்களுடைய இளதநெஞ்சில்‌