பக்கம்:என் தந்தை தாயர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வி. ம. சோம்பேறி சகுனம் பார்த்தது (அங்கம்-1 ஏதாவது கொண்டு வந்தாலாச்சு, இல்லா விட்டால் உம்மெ வெளியே தள்ளி தெருக்கதவே தாப்பாள் போட்டுண்டுடுவேன் ! சரி-ஆனகே-இதோ புறப்படரேன்-ஏதாவது கட்டு சோறு இருந்தா கட்டிகொடு வழிக்கு. கட்டுசோரு -அடுப்பெ மூட்டி ரெண்டு நாளாச்சு ! கட்டு சோத்துக்கு எங்கே போரது ? .ொண்டு வெத்திலே பாக்காவது கொண்டாயேன் ? (அதைக்கொண்டுவர அறைக்குள் அவனது மனைவி போக, அவளறியாதபடி மூக்கில் கொஞ்சம் ஈஸ்யம் போட்டுக்கொண்டு நான்கு தும்பலேத் தும்புகிருன்) . இந்தாரும் வெத்திலேபாக்கு. அடி ! பாத்தையா ! புறப்படப் போகும்போது தும் பல் வந்தது. 'தும்பலில் புறப்பட்டக்கால் துன்பமே விளைந்திடுமன்ருே’ என்று பெரியவாள் சொல்லி யிருக்கா? நான் இண்ணேக்கு புறப்படவே மாட்டேன்! பிறகு ஏதாவது எனக்கு கெடுதி நேரிட்டால் நீ என்ன செய்வாய் ! அதை நினைத்தாலும் எனக்கு துக்கம் மேலிடுகிறது - மொட்டை யடிச்சிண்டு மூலேயிலே உக்காந்திண்டு இருக்கிறதே பார்த்து நான் சகிக்கமாட் டேன் ! (அழுவது போல் பாசாங்கு செய்கிருன்.). ஒய் ! பிராம்மணு ! நீர் ஏதாவது நாடக மாடக் கத் திண்டிருக்கிறீரா என்ன ?-வாஸ்தவமா கண்லே ஜலம் கூட வந்துாட்டுதே!-அதெல்லாம் அப்படி ஒன்றும் நேராது, கேர்ந்தாலும் அதை நீர் பார்க்க மாட்டீர் ! துக்கப்படாதீர்-கண்ணேத் துடைச்சிண்டு புறப்படும். உம்-புறப்படுகிறேன் ! (வெறுப்புடின் புறப்படுகிருன் வேண்டும்ென்று வாசம் கதவு தடுக்கி விழுகிருன், பார்த்தாயாடி ! இந்த சகுனங்களிலெல்லாம் என்ன இருக்கு இண்ணயே! தம்பல் வந்ததற்கு சரியாக இப் பொழுது, கால் தடுக்கி விழுந்தேன் பார் !