பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

என் தமிழ்ப்பணி

சேர்த்த செயலினும் இது கேடுடைத்தாமோ? ஆகாது பாண! அஞ்சாது சென்று வருக” எனக் கூறி அனுப்பினாள்.

தனக்குப் பரிசு பல அளித்துத் தன்னைப் புரக்கும் பேரருள் உள்ளத்தினளாய மனைக் கிழத்தியின் மன நிலை அறியாக் காரணத்தால், அன்று அவனுக்குப் பரத்தையர் உறவு கொள்ளத் துணைபுரிந்த பாணன், அவள் துயர் அறிந்த பின்னர், அது தீர்க்க உதவாது. வாளாக் கிடப்பனோ: விரைந்து ஓடினான் பரத்தையர் சேரிக்கு.

“கடல்பாடு அவிந்து தோணி நீங்கி,
நெடுநீர்இருங்கழிக் கடுமீன் கலிப்பினும்,
வெவ்வாய்ப் பெண்டிர் கெளவை தூற்றினும்,
மாணிழை நெடுந்தேர் பாணிநிற்பப்

5.:பகலுநம்வயின் அகலானாகிப்
பயின்று வரும்மன்னே, பனி நீர்ச்சேர்ப்பன்;
இனியே மணப்பரும் காமம் தணப்ப நீந்தி
வாராதோர் நமக்குயாஅர் என்னாது
மல்லல் மூதூர் மறையினை சென்று

10.:சொல்வின் எவனோ? பாண! எல்லி
‘மணைசேர் பெண்ணை மடிவாய் அன்றில்
துணையொன்று பிரியினும் துஞ்சா காண்’ எனக்
கண் நிறை நீர் கொடு சுரக்கும்
ஒண்ணுதல் அரிவை; யான்என் செய்கோ எனவே.”

திணை : நெய்தல்

துறை : தலைவன் பரத்தையிற் பிரிந்தானாக வருந்திய
தலைவியின் துயர் நிலை கண்டு தோழி பாணனுக்குச் சொல்லியது.

புலவர் : கருவூர்ப்பூதம் சாத்தனார்