பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13. வள்ளுவர் காட்டும் வழி

“தமிழனுக்கு உள்ள ஒரு சிறப்பு அவன் அங்கு சென்றாலும் தமிழ்க் கலாசாரத்தைப் பரப்புவது ஆகும். கடல் கடந்து சென்று தமிழன் பரப்பிய கலாசாரத்தின் சுவடுகள் இன்று உலக நாடுகள் பலவற்றில் காணப்படுகின்றன.

மது வருந்துவதும், மங்கையரோடு கூடி இன்பம் துய்ப்பதுமே வாழ்வு என்று இருந்த நாகர்களுக்கு பழத்தமிழன் ஒருவன் மதுவும் மங்கையும் பெற்று வாழ்வது வாழ்வாகாது என்று தமிழ்நாட்டு அறம் போதித்து அவர்களை நல்வழிக்குத் திருப்பிய சேதியை மணிமேகலை கூறுகிறது.

தமிழன் அக வாழ்வில் அதிக கவனம் செலுத்தினான். புறவாழ்வைப் பற்றி அவன் கவனிக்கவில்லை.

வானுயர் மாடி வீடு கட்டி வாழ்வது, விரைவான வாகனங்களில் பிரயாணம் செய்வது, நவீன வசதிகள் பெற்று இருப்பது முதலானவற்றை இன்று நாகரீக வளர்ச்சிக்கான அறிகுறிகள் என்று பலரும் கருதுகிறார்கள்.

சந்திர மண்டலத்துக்குச் சென்று அங்கிருந்து மண் எடுத்து வருவது விஞ்ஞான விந்தைதான். அறிவியல் வளர்ச்சியை அது காட்டுமே தவிர நாகரிக மேம்பாட்டுக்கு அது எடுத்துக்காட்டு ஆகாது.

என்- 6