பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

என் பார்வையில் கலைஞர்


ராணுவம் விடுதலைப்புலிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் ஒன்றை தொடுத்தது. இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவதற்கு, விடுதலைப் புலிகளைத் தவிர வேறு நாதியில்லை . இதனால் கலைஞர் இந்த புதிய முழக்கத்தைக் கொண்டு செலுத்தவில்லை என்று நினைக்கிறேன். நான்கூட, அந்த தாக்குதலின் போது என்னையறியாமலே மானசீகமாக விடுதலைப் புலிகளின் பக்கமே நின்றேன்.

சட்டப் பேரவை தேர்தல்கள் நடக்கும் வரை கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்யும் நான் அரசியல் சமூக நிலவரத்தை கலைஞரிடம், தொலைபேசியில் நேரடியாகப் பேசுவேன். சண்முகநாதனிடம் எனது கருத்துக்களை கூறி அதை கலைஞரிடம் கூறவேண்டும் என்றும் கேட்டுக் கொள்வேன். என்னுடைய நோக்கம் எல்லாம் கலைஞர் வரவேண்டும் என்பதை விட, தமிழகத்தில் நிலவிய அராஜகமும் நிலப்பறிமுதலும் ஒருவரை முக்கியத்துவம் ஆக்குவதற்கு ஓராயிரம் பேரை பேடியாக்கும் சினிமாத்தனமும் போயாக வேண்டும் என்ற சிந்தனையே காரணம். கூடவே கலைஞர், தமிழ் சமுதாயம் மேன்பட ஆற்றியத் தொண்டும், பணியும் போனஸாக நினைவுக்கு வந்தன. இத்தகைய உரையாடல்களும், தொடர்புகளும் கலைஞருக்கும் எனக்கும் இடையே நிலவிய நெருக்கத்தை வலுவாக்கி விட்டன.