பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

39


கதிரொளி பட்டு நல்ல நீராகி விட்டது என்றும் ஒரு போடு போட்டார்.

எனது ஏற்புரையில் கலைஞருக்கும் எனக்கும் உள்ள மோதல், காதல், விஞ்ஞானரீதியான உறவு முறை ஆகியவற்றை எடுத்துரைத்தேன். எனது படைப்புகளை முழுமையாகப் படைத்து விட்டு, அவர் உரையாற்றியதில் நெகிழ்ந்து போன நான், பேச முடியாமல் விக்கித் திக்கினேன். இது பற்றி கலைஞர் குறிப்பிடும் போது, நான் அவரிடம் தெரிவித்த சில பரிந்துரைகளை மறைமுகமாக குறிப்பிட்டு இவற்றால் ‘நான் திரும்பிப் பார்த்தேன், திருத்திக் கொண்டேன்’ என்று உணர்ச்சிவசமாக பேசினார். என் பேச்சிலிருந்தே மேற்கோள் காட்டி, ‘சமுத்திரத்திற்கு என் மீது அப்படி ஒன்றும் அன்பில்லை ஆனால் அவர் பிரியப்படும் படியாய் நான் நடந்து கொண்டிருக்கிறேன்’ என்றார்.

கலைஞர் மனம்விட்டு பேசிக் கொண்டிருந்தார். அப்போது விமானத் தாமதத்தால் மத்திய அமைச்சரான தோழர் எஸ் ஆர். பாலசுப்பிரமணியம் அவர்கள் கலைஞர் பேசிக்கொண்டிருக்கும் போது மேடைக்கு வந்துவிட்டார். கலைஞரும் பேச்சை உடனடியாக முடித்துக் கொண்டார். எஸ்.ஆர்.பியும் பதினைந்து நிமிடம் வரை பேசினார். கலைஞரும், தான் போனால் கூட்டம் கலைந்துவிடும் என்கிற அனுமானத்தில் எஸ் ஆர்பி பேசுவது வரைக்கும் காத்திருந்தார். இந்த நயத்தகு மேடை நாகரீகம் பெரும்பாலான தலைவர்களிடம் காணக் கிடைக்காதது.

இந்த நிகழ்ச்சியில் என்னை ஆளாக்கிய எனது சித்தி ராசம்மாவிற்கு, கலைஞர் மேடையில் பொன்னாடை போர்த்தினார். அந்தக் காலத்து பின் கொசுவ புடவையோடு தோன்றிய அந்த எளிய சித்தியைப் பார்த்ததும் கூட்டமும் நெகிழ்ந்தது. கலைஞரும் நெகிழ்ந்து போனார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, பொன்முடி, துரைமுருகன், எஸ்.பி.சற்குணம் ஆகியோரும் நக்கீரன் ஆசிரியர் கோபால், யு.என்.ஐ செய்தியாளரான தோழர் ரமேசன், இலக்கிய வீதி இனியவன், என்னுடைய கல்லூரி ஆசிரியரும் காவற்துறை தலைவருமான ராஜ்மோகன், நண்பர் அருண்வீரப்பன், சட்டப்பேரவைத் துணை தலைவர் பரிதி இளம்வழுதி, எனது அலுவலக ஊழியர்கள், வேலூர்