பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼?& லா, ச. ராமாமிருதம்

சமாத்ரே நம:

சத்யப் பிரசாதினியே நம: மஹாதாண்டவ மஹாப்ரளய சாrண்யே நம: ஸ்தோத்ர ப்ரியே நம: . தருண்யை நம:

திரா நம:

விஜயா நம:

என் மனதில் நின்றதை, வரிசை தப்பி, அவள் சொன்ன தைத் திருப்பிச் சொல்கிறேன்.

பிரார்த்தனை மனிதனின் கடைசி அடைக்கலம். இயற்தைதான். நம்புகிறோமோ இல்லையோ? வேறு வழியு மில்லை. இதுவும் ஒரு பழக்கதோஷம்தான். இதுவும் பயத்தின் உச்சத்தின் ஒரு உருத்தான்.

ஆனால் ஒன்று பாஸ்கர் உனக்காக ஒருத்தி பிரார்த் தனை செய்கிறாள். ஏன்? ஒருத்தி இருப்பதனால்தான். ஒருத்தி மட்டுமன்று. அவள் மூலமாக விருத்தியாக இருக்கும் உன் குடும்பம் உன் முன்னோர்களிலிருந்து உன் வரை தழைத்து வந்திருக்கும் உன் குடும்பம் அவளுடைய பிரதி நிதித்வத்தில் உனக்காகப் பிரார்த்தனை செய்கிறது. ஆனால் எனக்கு?-ஓ இது உன் மேல் பொறாமையில் எழுந்த எண்ணம் அன்று (ஆனால் அதையும் எப்படி திச்சயம் , சொல்வது?) என் வேளை வரும்போது எனக்காக நானே பிரார்த்தனை செய்துகொள்வதா? இப்பவும் அதில் ஒரு அவமானம் தட்டுகிறது. பயம், பக்தி, நம்பிக்கை எதையும் முதுக்கும் எனக்கு: என் பிரார்த்தனையை, எனக்கும் புரியாத சக்தி கேட்கப்போகிறதா? நான் எதில் சேர்த்தி: சம்போ சங்கரோவா, அம்போ ஐயகோவா?

பாஸ்கர், you iucky guy.

உறவு என்று ஒன்று வேண்டும். இருந்தால்தான் விடு என்ற களை வரும். நாள் கிழமை, பண்டிகை, பாயஸம், குத்து விளக்கு கற்பூரம், நமஸ்காரம், ஆசீர்வாதம், உதயம்,