பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசனம் வேண்டாம் 霊5互

இல்லை-சென்னைக்கு மூட்டை கட்டும்போது, அம்மாவின் ட்ரங்க் பெட்டியை ஒழிக்கையில், அவளுடைய துணிமணி மடிப்பிலிருந்து ஒரு கலைமகள் விழுந்தது. புரட்டின பக்கத் தில் இருந்த கதையின் ஆரம்ப வாக்யமே மனதைச் சுண்டி யிழுத்தது. போட்டது போட்டபடி அங்கேயே உட்கார்ந்து படித்தேன் படித்து முடித்தவுடன் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தேன்; என்னேரம் தெரியவில்ல்ல.

என்ன கதையோ?”

'காலம் காலம் கற்பார்ந்த காலமாய் என்று ஆரம்பிக் கிறது. அதான் ஒரு ஆற்று மணல் பள்ளத்தில் ஒரு கல்லின் வழுக்கை மண்டை லேசாகத் தெரிகிறது. அதைச் சுற்றி உலகம் நல்லது பொல்லாதுடன் அதன் நியதியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கால இயக்கத்தில் ஒரு சம்பவத்தின் முத்தாய்ப்பாய், அதுவே கதையின் முத்தாய்ப்பாய், அதை மூடிக்கொண்டிருந்த குப்பை செத்தைகள் கலைந்து ஒரு ஸ்வயம்புவிங்கம் வெளிப்படுகிறது. -

சஆ1 யோகம். '

'yes. ஒரு தெளிவு உணர்ந்தேன். ஒ. எல்லாமே இது தானா, இவ்வளவுதானா? தெய்வமும் ஒரு சாஷிதான் என்கிற தெளிவு. இந்தத் தெளிவும். அது தந்த ஆதரவும் என்னிடம் நிரந்தரமாகத் தங்கின என்று சொல்ல மாட்டேன். அது சாத்யமில்லை. நாம் மனித ஜன்மம் தானே! ஆனால் கண்ணில் ஒரு கீறு அகன்று திறந்து கொண்டது. திறந்தது மூடிக்கொள்ளவில்லை. அது எனக்கு ஒரு திருப்புமுனை: உங்களுக்குச் சாதனை.

இது தெளிவுதானா? தெளிவோ இல்லையோ கூடவே ஒரு பிடிவாதம் வளர்கிறது. விதியே உன்னால் முடிந்தது இவ்வளவுதானா? என்ற சவாலுடன் வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறோம். வேறு வழியும் ஏது? நீ அழுதுகொண்டே யிருந்தாலும் விழிக்கு அக்கரையில்லை :