பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்றல் I 59

இவரையே நிச்சயம் பண்ணிவிட அப்பாவிடம் சொல் லம்மா’’ என்று மகள், தாயிடம் கொஞ்சியபோது, அம்மா, ஏண்டி, இன் மனசை நீ வெளிப்படுத்திட்டே உன்னை அவன் பண்ணிக்கத் தயாராயிருக்க வேண்டாமா?’ என்ற சந்தேகத்தை எழுப்பியதும், அதற்கேற்றபடி அடுத்து நாலு நாட்கள் கிணற்றில் கல்லைப் போட்டாற்போல் அந்த இடத்திலிருந்து எந்தத் தகவலுமில்லை. அவளுக்கு உள்ளே கதிக் திக்". அடுத்து என்ன சமாதானமென்று மனம் சொந்த மாக வழி தேடிக்கொண்டிருக்கையில், ஐந்தாம் நாள் சேதி அவள் மனம்போல மாங்கல்யமாக முடிந்தது. அப்படியும் மனதில் ஏதோ அநிச்சயம், பயம், மணவறையின் இருட்டில் அவர் கை தேடி வந்து அவள் கையை முரடாகப் பிடித்த அகற்கே அப்பவே, அப்பாடா, நல்லபடியா முடிஞ்சுது என்று ஒரு தனி மூச்சு தன்னிடமிருந்து வெளிப்பட்டதும்அத்தனையும் கேலி டாஸ்கோப்.

தற்செயலில் மேலாக்குக்கு வெளியே வந்துவிட்ட மாங்கல்யத்தை அவள் கை நெருடிக் கொண்டது. நடந்த தெல்லாம் கனவல்ல, இப்போது பங்களுர்-மைசூர் வேடிக்கை பார்க்க டூரிஸ்ட் பஸ்ஸில் இடித்துக்கொண்டு, உட்கார்ந்திருப்பது, இடித்துக்கொண்டே காட்சி பார்க்க நடப்பதும் பொய் அன்று. என்பதற்கும் இதைவிட சாட்சி வேறு என்ன வேண்டும்? உள்ளே அலை பொங்கிற்று.

-இந்த கைடு என்ன தொணப்பிண்டேயிருக்கான்? இவன் பேச்சும் விளக்கமும் யாருக்கு வேண்டிக் கிடக்கு. இந்த அரண்மனையில் என் இளவரசும் நானும் நுழைந்து சுற்றிவர இவன் உத்தரவு தேவையா? சந்தோஷம் மிகை யானாலே, தனியாக ஒரு அசடு வழிகிறது தனக்கே தெரி கிறது. ஆனால் அதுபற்றி வெட்கமாயில்லேயே! என் மனத் தின் எழுச்சியை பங்கிட்டுக்கொள்ள மனம் தவிக்கிறது. ஆனால் அதன் அந்தரங்கங்களில் சில இவருடன் சொல் விக் கொள்ளக்கூட சாத்தியமில்லை. கன்னத்தில் ரத்தம்