பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்றல் 161

காவிய பரிமளம் கமழ்கிறது. ஆனால்...' என்று இழுத்தான். மற்ற இருவரும் கைகளைக் கட்டிக்கொண்டு அவன் சொல்லப் போவதற்கு ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் கட்டடத்தின் உள்ளும் வெளியிலும் சுற்றிப் பார்த்துக்கொண்டே வருகையில் என் மனதில் பட்டதென்ன தெரியுமா? முதலில் இனம் தெரியாதொரு பெரிய விசனத் தேக்கம். அதை இனம் தெரியாது என்று முற்றிலும் சொல்வ தற்கில்லை. எப்படியும் அது ஒரு கல்லறைதானே!

பிறகு, பார்க்கப்போனால் ஒரு மனிதப் பிறவி இறந்து போனதற்கு இவ்வளவு மகத்தான பாடா, கட்டிடமா? இதற்குச் செலவாகியிருக்கும் சிரமத்துக்கும் காலத்துக்கும் பணத்துக்கும் பொருளுக்கும், நம் பக்கத்தில் ஒரு கோவிலைக் கட்டியிருந்தால், தெய்வ வழிபாடுக்கும் அதன் விளைவால் மன அமைதி ஆறுதலுக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும், எத்தனை பேருக்குக் காலா காலத்துக்கும் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றாமல் இல்லை. விட்டுச் சொல்லி விட்டேன்.”*

சிறிது நேரம் எல்லாரும் மெளனமாயிருந்தனர். பிறகு மேரி, அங்கு நான் வேறுபடுகிறேன்' என்றாள். எல்லா வற்றையுமே பயன் தேடும் நோட்டத்துடன் பார்த்தால், வாழ்க்கையில் பிறகு என்னதான் இருக்கிறது? தாஜ்மஹால் காதலுக்குக் காணிக்கை என்று அலட்சியமாகத் தள்ளிவிட முடியாது. அப்படி எதைப் புறக்கணிக்கிறீர்கள்? தாஜ் மஹாலையா, காதலையா? கடவுள்மேல் காதலுக்கும் ஒரு ஆண், பெண் இருவருக்குமிடையே நேரும் காதலுக்கும் என்ன வித்தியாசம்? உங்களுடைய காளிதாசனின் சகுந்தலா, துஷ்யந்தா, எங்கள் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் வித்தியாசமானவர்களா? நான் சொல்வதில் இயக்க வார்த்தை கடவுளுமில்லை, மனிதனுமில்லைகாதல்."

பி.--11