பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 g லா, ச. ராமாமிருதம்

வேண்டாம், சிற்றலைகள் தவழும் உன் முறுவல் மயக்கும் மர்மமுமே எனக்குப் போதும். அறிந்துகொள்ள நான் ஆசைப்படவில்லை, ஆச்சர்யப்பட்டுக் கொண்டே யிருக்கத்தான் விரும்புகிறேன்; உன் கரையோரம் உட். கார்ந்து காயிதக் கப்பல்களை விட்டுக்கொண்டிருக்க, ஒரு நாள் உன் கரையோரம் செடியிலிருந்து கழன்ற பூவாய் உன்னில் விழுந்து, உன் அலைகள் மீது மிதந்து சென்று உன்

சுழிப்பில் மூழ்கிவிட

தாயே!

தாய் மட்டும்தானா நீ?

தாயாய்ச் சுரக்கிறாய்

பாசமாய்ப் பொங்குகிறாய்

காதலாய்க் கசிகிறாய்

காமமாய்ச் சுழிக்கிறாய்

சிந்தாதேவி, காட்டாறின் வெறியில் உன்னை நினைக்கவே பயமாயிருக்கிறது.

கோடாமுத்திரை.

கன்னிரின் ப்ரவாகமாக-வேண்டாம் வேண்டாம் , மாட்டேன். எண்ணமே தாங்க முடியவில்லை.

நீ நித்ய கல்யாணி.

ஆனால் இவ்விரண்டு தன்மைகளின்-இல்லை. எத்த

னையோ தன்மைகள், உன் தொப்புள் சுழிப்பில் சீறிக் கொப் மேலே அமைதி பாயும் நதி நீ. சாந்தஸ்வரூபிணி.

ஆனால் உன் சாந்தம் நம்புவதற்கில்லை.

ஆனால் உன்னை நம்பாது எதை நம்புவேன்?

நீயலால் கதி ஏது?