பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 லா. ச. ராமாமிருதம்

தல்லோ தெரியப்போகிறது! வாய் திறந்து கேட்பையா? பழக்கமிருக்கா? எனக்கு இப்போ எப்படித் தெரியும்? பசி வந்திடப் பத்தும்-பறந்து போகட்டும், எனக்கு இப்போ எப்படித் தெரியும்? பழக்கம் இருக்கா, பிச்சையெடுக்கவோ பல்லை இளிக்கவோ, திருடவோ, அடித்துப் பிடுங்கவோ, அகப்பட்டுக் டுதான் டால் கொடுப்பதை வாங்கிக் கொள்ளவோ

லிஸ்டை அடுக்கிக்கொண்டே போனால்? இனிமேல் தான் தெரியனும் பட்டினி-உன் புளிச்சேப்பத்துக்கு டாக்டர் விதிக்காமல், பட்டினிக்காகவே பட்டினி, பட்டி ஒசின்னர் இது ஒடு தின்பண்டத்தின் பெயர் என்று நினைத் துக்கொண்டிருக்கிறாயா? இல்லையப்பா மகனே, பசிக் கொடுமை படர்றபோதுதானே தெரியப்போகிறது.

தெரியட்டும் சைத்தான். மனமெனும் சைத்தான். கேம் ஆரம்பித்துவிட்டது. இதோ நடந்துகொண்டிருக் கிறேன். என்ன கேம்? இன்றைக்கு நான் எனக்குப் பொறுப்பு இல்லை. ஆனால் கேம் ஆரம்பம் நன்றாத்தானிருக்கிறது. ஏ சைத்தான் நீ காட்டின பசிப் பூச்சாண்டி, எடுத்தவுடனே மறைஞ்சு போச்சு என்ன சொல்றே: கத்துக்குட்டியின் ஆரம்பம் அதிர்ஷ்டம் என்பார் அல்லவா?

உள்ளிருந்து எதிர்ப் பேச்சு எழவில்லை. பாம்பு படுத் திருக்கிறது. நம்ப முடியாது. இப்போதுதானே, போதே ஆரம்பித் திருக்கிறது.

சன்யாசியாகவே நாடு முழுதும் திரிந்த ஸ்வாமி விவேகானந்தரின் எந்தப் படத்திலும் அவரது கன்னங்கள் ஆப்பிள்களாகத்தானே பிரகாசிக்கின்றன ! *---

அவருடைய குருநாதரும், தானாகத் தன் தவங்களில் தன்னை வருத்திக்கொண்ட பட்டினிகள் அன்றி, பசியால் வருந்தியதாக வரலாறே இல்லை. கேட்கப் போனால் அவர்