பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 to வா. ச. ராமாமிருதம்

பேசினது அவளா, அல்ல அவள் குரலில் மனத்தின் எதிரொலியா?-நட நட நடந்துகொண்டேயிரு, ஓடாதே, நட- நான் ஏன் ஒடனும்? ஆகாது என்ன செய்து விட்டேன், என்ன நடந்துவிட்டது?

ஆண்டவனே நீ என்று ஒன்று இருந்தால், நீயும் ஒப்புக் கொள்ளவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. உயிர் என்று படைத் தாய். அதை உடலினுள் வைத்தாய். உடலைப் பாலென்று பிரித்தாய், கன்றுப் பருவத்திலேயே அதற்குரிய உணர்வுகளையும் வேட்கைகளையும் ஊட்டி உயிரை வேதனையாக்கி, நீ மனிதன், ஆறு அறிவு படைத் தவன், மனத்தை அடக்கி ஆளவேண்டும் என்று எனக்கு தியாயம் பேசுவது நீயா, அல்லது மனிதன் கூட்டுவாழ்வின் பத்திரத்துக்காக, குற்றமுள்ள நெஞ்சு, மனசாட்சியென்று என்னையே எனக்குக் காவல் வைத்துக் காட்டும் பூச்சாண்டியா?

சித்தனா சுவாரஸ்யம், நடை தெரியாமலே வெகுதூரம் வந்துவிட்டேன்.

அட! வாய்க்கால் இன்னுமா கூடவே1-வயிறுள் பிராண்ட ஆரம்பித்துவிட்டது. இருக்கட்டும் ஒருவேளைப் பட்டினியில் பிராணன் போய்விடுமா? வார்த்தைகள் தைரியம் சொல்லும் பாணியில், உண்மையில் கேலி செய் கின்றன.

ஒடை, சட்டென என்னைவிட்டுப் பிரிந்து, வேகமாக, அகலமாக ஒதுங்கிய விசாலத்தில் ஒரு கோயில் தோன்று கிறது. மதில் மூலைகளின் மேல் ரிஷபங்கள் படுத்திருக் கின்றன. ஆலயம் தோன்றிய திடீர், ஏதோ எனக்காகவே அப்பவே படைக்கப்பட்டது போன்ற ஓர் எண்ணத்தில், ஏதோ ஒரு பெருமிதம், சிருஷ்டிக்கு நன்றி. நான் நினைப்பது எத்தனை சிறுபிள்ளைத்தனம் என்பதுகூட மறந்து உணர்கிறேன். இந்த எண்ணத்தில் பசிகூட மறக்