பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔镑罗 லா, ச. ராமாமிருதம்

காசுக்கு வழியில்லையென்று தெரிவிக்கக் கை விரித்தேன்.

குருக்கள் ஏதோ உரத்த சிந்தனையில் ஆழ்ந்தவராய், ஹாம், நாழியாச்சு, இனிமேலும் எவனும் வரமாட்டான். விலைபோக வழியில்லை. ஹாம், பாழாப்போவதில் பரதேசி வயித்தில் போகட்டும்-சரி இந்தாரும் பிடியும்!"

மறுபடியும் கையை விரித்தேன்.

தெரிகிறது சுவாமி! உம்மிடம் இருந்தாலும் இனிமேல் இருக்கிறதாகக் காண்பிப்பேளா? எனக்கும் வீட்டுக்குப் போகணும். பிடியும்:

மூன்று பொட்டலங்களைத் திணித்தார், இதையும் கொடுத்துடலாம். ஆனால் கூடையைக் காலியாக்க வேண் டாம்னு பார்க்கறேன், நடவும் உம் காட்டிலே மழைதான்.”*

குளத்தங்கரையில் உட்கார்ந்து பொட்டலங்களைப் பிரித்தேன். ஒரு புளியம்சாதம், இரண்டு தயிர்சாதம். முதல் பொட்டலத்தில் கொஞ்சம் வாழைக்காய்க் கறி, தயிர் சாதத்தின் ஒரமாய் விட இலையில் புளிக்காய்ச்சல்.

தேவாமிர்தம்,

பசித்துப் புசிக்க தனிப் புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும். பசி வேளையின் ருசியே தனி பசிக்கு எதுவும் ருசி, உயிர் வாழவே உண் எனும் சூத்திரத்தை அநுபவமாக அறியும் வேளை புண்ய காலம். ஆனால் இந்தச் சாதங்கள் உள்ளபடி ருசியாகவும் இருக்கின்றனவே! பாகம் குருக்களா, மாமியா? யாராயிருப்பினும் வாழ்க!

  • £

கடைசிப் பொட்டலத்தின் பாதியில் வயிறு சதம் ஆகிவிட்டது. காக்கைக்கும் நாய்க்கும் போட்டேன். ஆண்டவன் அவைகளுக்கும் சேர்த்துத்தான் எனக்கு அளந்: திருக்கிறான்.

என் பசியாற்றவே கோயிலைக் காட்டி, உள்ளே இழுத்தாயோ? அடுத்த நிமிடம் நேரப்போவது என்னென்று.