பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 லா, ச. ராமாமிருதம்

விரித்த சடையில் கங்கை குலுங்குகையில் அவள் சிந்தும் புனித ஜலத்துடன், சடையில் தரித்த மூன்றாம் பிறையி னின்று ஒழுகும் அமுததாரை கலந்து அதுவே ஒரு மதுர திரமாகி, அதுவே வெள்ளியங்கிரியின் பல பாறைகளின் நடுவே, ஒரு வெடிப்பு வழி. அவனுடைய அகண்ட கருணை யில் மாந்தரின் உய்வுக்குப் பூலோகத்துக்கு அருவி பாய் கின்றது.

அவன் ஆட்டத்துக்கு, அஷ்ட திசைகளும் அசைகின்றன, பூமியைத் தாங்கும் அஷ்டதிக் கஜங்களும் களிதாங்க மாட்டாது, கால் மாற்றி நடனம் புரிகின்றன.

இந்தத் திமிலோகத்தின் திகிரி நடுவே அதன் அச்சாணி யாய் அவன் திகழ்கிறான். வலது கால் கட்டை விரல்நுனியில் நின்றபடி கூத்துக் காட்டுகிறான்.

அவன் மருங்கில் அவள் நிற்கிறாள். இடதுகை இடை மேல், வலதுகையில் கன்னத்தை ஊன்றி அதிசயத்தில் தன்னை மறந்து. அவன் ஆட்டம் நெஞ்சில் ஏதேதோ துகள் களை எழுப்புகின்றன. மகரந்தப் பொடிகள் விழித்து எழு. கின்றன. வெட்கமும், வேட்கையும் இதயம் தாண்டி முகத் துக்கு வந்து கண்களில் தவிக்கின்றன.

சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன். நெற்றிக்கண் திறந்துதான் இருக்கிறது. இமயத்தையும் பாகாய் உருவாக்கவல்ல அக்கண்ணில் சுடர் இப்போது தண் ணொளி காட்டுகிறது. ஞானச்சுடர் அந்த ஒளியில் வெள்ளி மலையைச் சூழ்ந்த வானத்தின் அடிவாரத்தில் செந்திட்டுப் படர்கின்றது.

‘இன்று நான் ஆனந்தக்கூத்தன்! இன்று நான் ஆனந்தக் கூத்தன் காணுங்கள் காணுங்கள் ! கண்டதெல்லாம் எடுத்துச் செல்லுங்கள்! என்னிடத்தில் எதுவும் விலைக்கு