பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலப்பாகம் 罗覆器

கொட்டட்டும். தாரைகள் முழங்கட்டும் வாத்யங்கள் வாசிக்கட்டும். கானங்கள் சேரட்டும். பாடுபவர் பாடட்டும். ஆடுபவரும் ஆடட்டும். -

ஆனால் அவனோடு யாரால் ஆட முடியும்? ஆட்டத்தில் வேகம் ஏற ஏற, அந்தச் சூடு கக்கிய ஆவி வெள்ளி மலையைச் சூழ்ந்துகொண்டு, அகில் மணம் வீசிற்று அவன் மேனி கக்கிய வேர்வையினின்று அபூர்வமான சந்தனம் உச்சியிலிருந்து

அடிவாரம் வரை கமழ்ந்தது.

அந்த வேகம் தாங்காமல் வெள்ளியங்கிரியே மத்தாய்க் கடைந்தது. நானா வாசிக்கிறேன்? என் கைகள் என் வசத்தில் எங்கு உள்ளன? விரல்கள் தனித்தனி உயிர்கள் பெற்றுக்கொண்டிருக்கின்றன. வாத்யத்தின்மேல் அவை களின் துடிப்பு அவைகளுடையது. என் சுயத்தன்மையில் என் வாசிப்பு இந்தத் துரிதத்துக்கு ஈடுகொடுக்க முடியுமா?" நந்திக்கே தெரிந்தது.

ஆண்டவனே, இது என் ஆச்சர்யம். எப்படி, எப்படிஎன் எண்ணத்துக்கு மூச்சுத் திணறுகிறது. உன் செயலில் ஆச்சர்யப்படுவதே அபராதம். மன்னித்தருள்வாய்-எப்படி உன் துக்கிய திருவடிக்குச் சரியாக தூக்கிய இடதுகை விரல் கள் தனித்தனி நுனி வளைந்து, உன் நர்த்தனத்தின் ஈடு பிசகாமல், தனித்தனி அசைவுகள், முத்திரைகள் காட்டு கின்றன,

ஆனால் வலதுகை அபய முத்திரையில் அசைவற்று அப்படியே நிலைத்து நிற்கின்றது. சரணாகதர்களுக்கு அதுவே துணை ஆகையால் இத்துணை கோலாகலத்திலும் அது நிலை பிசகவில்லை. அதில்தான் அவன் கருணை அவ்வளவு துல்லியமாக வெளிப்படுகிறது. உள்ளங்கை ரேகை மலரின் இதழ்களாக விரிந்திருக்கின்றன.

இன்று அவன் சதுர்ப்புஜம் காட்டுகிறான். இடதுகை நடுவிரல்களிடையே துள்ளும் மானின் உடலில் புள்ளிகள் சுடர் வீசுகின்றன.