பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலப்பாகம் 露翼g

முதல் தரிசனம் நீ அங்கிருந்தாய் விழிகளில் என் கேள்விக் குப் பதிலாக உன் விழிகளில் கேள்வியும் அமைந்தது. கண்டேன். -

ஆம் உன் விழிப்பும் என் விழிப்பும் ஒரே சமயம், நானும் நீயும் அதே சமயம். சொல் பிறக்கு முன்னரே நானும் நீ"யும் என பாஷை பிறந்து விட்டது.”

புவனத்தின் ஆதிமகன் ஆதிமகள் நாம். அச்சமயத் திலேயே உன் சந்தேகத்துக்கு இடம் தரும்படி வேறு மகள் தோன்றவில்லையே! மற்றவை எல்லாம் நம் சிருஷ்டிதானே : தேவி நம்மிடையே இதுபோன்ற சந்தேகங்களுக்கு வழியே இல்லையே. தேவி, உன் பொழுதுபோக்குக்கு ஏதேனும் எண்ண வேண்டும் என்று எண்ணினாயா?"

அவள் புருவங்கள் பயத்தில் நெரிந்தன. கைகள் கூப்பிக்: கொண்டன.

அவன் பரவச நிலையை எய்திவிட்டான். அவன் குரல் அசரீரி போல் வந்தது அவளுக்குப் பயமாக இருந்தது. வியப்பாக இருந்தது. இன்பமாக இருந்தது.

தியானத்தில் அமர்கிறேன். மோன நிலையைத் தாண்டி மூலகர்ப்பாசயத்தை அடைகிறேன். அங்கு என்னையும் நான் இழக்கும் இருள். அதற்கு முன்னும் இல்லை. பின்னும் இல்லை. எதற்கும் எதுவும் எங்கும் அதுதான் . அது என்றால் எது?

பித்தனின் சிரிப்பு, கேட்பவர் பாக்யம்,

அந்தத் தியான நிலையில் இருள் கழன்று வெளிப் படுவதே என் மார்பில் உதைக்கும் உன் பாதம்தான். சக்தியாய் நீதான் தியானப் பொருள். தேவி, நீ சொல் ஒருமையின் இரு கூறாக இருந்த நான்" நீ அன்றி வேறு அறியேன். மூன்றாவதாக நீ எது கண்டாய்?’’