பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霧證 வா, ச. ராமாமிருதம்

எனக்குத் தோன்றவில்லை. கயிற்றுக்கட்டிலை விட்டு எழுந்து, குரல் கேட்கும் திசையை நோக்கி, கைகளை நீட்டிக்கொண்டு, வாசலைக் கடந்து சென்றேன். அதுவும், யில் சப்தித்து எனக்கு வழி காட்டிக்கொண்டு முன்

; ; ;...&# * $538

யெல்லாம் தேனைச் சொரிந்துகொண்டு.”

T, ಟ್ರ್ಯ 2 *; 3 & சேன்றது :

சந்திரிகையென்றால், அன்றிரவின் சந்திரிகைதான் சந்திரிகை. அதுவும், அந்தப் பாதி ராத்திரியில், அந்த ப்தமான வேளையில், வழியில் கிடக்கும் ஒவ்வொரு ஆங்காங்கே சிறு சிறு பள்ளங்களில் தேங்கி யிருக்கும் தண்ணிரையும்-அன்று சாயந்திரம் திடீரென்று ஒரு சிறு மழை பெய் திருந்தது-தன் குளிர்ச்சியான நிலவால் அபிஷேகித்துக்கொண்டு, ஆங்கங்கே தரையில் வெள்ளைப் கோலமிட்டாற்போல், மர இலைகளின் நிழவிடையில், தனி ஒளியைச் செலுத்தியவண்ணம், தத்திரன் பரிபூர்ண அரசு செய்த காட்சி ஊஹாம், என்னால் சொல்ல முடியவில்லை-கண்டுதான் அனுபவிக்க முடியும்

அவ்வழகை;

"நான் மாந்தோப்பையடைந்து, கண்ணம்மா கோவிலை அனுதிவிட்டேன். கோவிலினின்றும் ஒரு உருவம் குதித் தோடி வந்து, கைகளை வீசி, என்கழுத்தை இறுகக் கட்டிக் கொண்டு, முகம், கண், வாய், மூக்கு, கன்னம் எல்லாம் மாறி மாறி முத்தமிட்டது. எனக்கு மூச்சுத் திணறி, நினைவு தெளியவே சற்றுநேரம் சென்றது.....

  • பதினைந்து, பதினாறு வயதுதான் இருக்கும். அவள் உடலின் ஒவ்வொரு உறுப்பிலும் யெளவனம் வழிந்தது. சன்வாபரண பூஷிதை. அடர்ந்து வளர்ந்த மயிரை, அழுத்தி வாரி, தாழம்பூ வைத்த அவளது பின்னல், நீண்ட சர்ப்பம் போன்று, தொடைக்கும் கீழிறங்கி, தரையை இடிப்பது போல் தொங்கியது. முகத்தின் ஒவ்வொரு லட்சணமும் அடைந்தேடுத்ததுதான். அவளது கண்கள் வாதாம் பருப்பை யொத்திருக்கும்; சற்று மேட்டுவிழிகள், இமை மயிர்கள்,