பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஸ் குண்டில் சில பிம்பங்கள் 会5

ஆகாது.

காமுப் பாட்டியென்றால்தான், முழு நாமமாய் முழு. ரூபம் கிடைக்கிறாள்! நிமிர்ந்தாள்.

இருவர் கண்களிலும் வினாவுக்கு வினா உராய்ந்தது.

எங்கேடா பயணம், சொல்லிக்காமே?

அட, ஊமையாப் போற அளவுக்குப் பெரியமனுஷனா எப்போ ஆனே? காலையில் கூட சரியா இருந்தியே!”

போறேன்... போயிண்டேயிருக்கேன்.” விளங்கத்தான் சொல்லேன்! நீ சொல்லாமலே அறிஞ்சுக்கிற அளவுக்கு எனக்குப் புத்திகூர்மை இருக்குமா?" சொல் விண்டு போனால் திரும்பி வரலாம். சொல்லிக் காமப்போனால்?’’

உதட்டைப் பிதுக்கிக் கையை விரித்தேன். டயலாக்" பிரமாதமா அமைஞ்சுட்டாப்போல் எனக்கு அப்பவே தோணித்து. ஆனால், அதேசமயம் துடைப்பம் என்மேல் இறங்கத் தலைப்படுவதை உடனே உணர்ந்தேன். அந்தக் கையை அப்படியே பிடித்துக்கொண்டு, லேசா-ரொம்ப லேசா முறுக்கினதும், விளக்குமாறு கீழே விழுந்த இசை கேடில் கட்டவிழ்ந்து, அத் தனைக் குச்சிகளும் புலுபுலு பஞ்சு மிட்டாய் படர்ந்தாப்போல், துக்கத்துக்கு அவிழ்த் துவிட்ட கூந்தல்போல், பாம்புப் படம் அசதியில் படுத்தாற்போல

துவண்டன :

விடுடா கையை விடுடா நாயே!” எகிறினாள். தவித்தாள். எகிறித் தவித்தாள். பூ: இவ்வளவுதானா? இவ்வளவு சோப்ளாங்கியா இருந்துண்டா இத்தனை அமுல் நடத்தியிருக்காள் இதுவரை இரண்டு கைகளும், என் ஒரு கையுள் அகப்பட்டுக்கொண்டன. என் தோளில் என் பை தொங்கிற்று.