பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

肇& லா, ச. ராமாமிருதம்

சின்னப்பிள்ளைக்கு என்ன ஞாபகம் இருக்கப்போற. துன்னு உன்னைப்போல வயசு காலத்தில் வேகம் தனியாத பெரியவாள் நெனைச்சுண்டுடறேள். சின்னப் பையனுக்குத் துரக்கக் கலக்கம்...கனவென்று கண்டானா, நனவென்று கண் டானான்னு ஒரு நினைப்பு வேறே...எதுவாயிருந்தாலும் நாக்கில் பல்லைப் போட்டு நம்மைத் தைரியமாக் கேட்டுடு: வானா என்று துணிச்சல் வேறே.ஆனால், என்னைக் கணக்கு வெச்சுண்டு சொல்றேன். குழந்தைகளுக்கு முனு. வயசிலேயே ஞாபகம் படிஞ்சுடறது. நல்ல சூழ்நிலையில், நல்ல நினைப்புக்கள் நல்ல பயிரா வளர்றது. என்போல் ஆரம்பத்திலேயே ஏறுமாறாகப் போய்விட்டால், அதிலேயே மனம் புழுங்கிப் புழுங்கி...முதலில் திகைப்பு, பிறகு ஏமாந்த உணர்வு, பிறகு துரோக உணர்வு, அடுத்துக் களங்கம்அதன் விளைவாய் ஆத்திரம், கோபம், புத் திக் கேடு எல்லாத் துக்கும் உங்களாலேயே அஸ்திவாரம் நட்டாறது...இதெல் லாம் பொது, என்னை ஆறு வயதில் உன் விளையாட்டுப் பொம்மையாய் தூக்கிண்டு வந்துட்டே... எனக்கு ஒண்னும் தெரியாதுன்னு, நீ பண்ணினதெல்லாம் பளிச்சினு சொல்லவா? இதுக்குமேல் வாய்விட்டுச் சொன்னால் ஒரு வருக்கொருவர் முகம் பார்க்கவே வெட்கக் கேடு வாய்க் காவின் ஊற்று ஜலத்தில், சாயக்கால் கலந்த மாதிரி...பாட்டி ஆண்டவன்...அவன் சித்தம் நம்மிருவரையும் எப்படியானும் வைக்கட்டும். ஆனால், இப்படி ஞானோதயத்தை ஏன் திடீர்னு கொடுத்துக் கட்டடத்தையே இடிக்கிறான்?

-தான் பேசப் பேச அந்த முகத்தில் வரட்டிபோல் கண கணப்பு ஏறிக்கொண்டே போயிற்று.காமுப் பாட்டி சந்தன நிறம் அவளைக் கோலம் பண்ணாமலிருந்தால், அவளுடைய பாவிய வயதில், அப்படியும் அவளுக்கு ஆபத்துத்தான். (ஆனால் அந்த நியாயம் வேறு) அப்படிக் காய்ந்த வெறும் சட்டிபோல் அந்தக் காங்கை அதன் முழுச்சிவப்பை அடைந்த பின் முகம் படிப்படியாக மங்கத் தலைப்பட்டது. அப்படியே குமுங்கி பஸ்பமா உதிர்ந்துவிடுமோ?