பக்கம்:எப்படி உருப்படும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

30 வேண்டும். இவர்கள் நல்ல முறையில் உயர்ந்த படங்கள் பிடித்துக்கொடுத்து மக்கள் ரசிக்காமல் தட்டிக் கழித்து விட்டார்களா என்ன !

ஆரம்ப காலத்திலாவது இரண்டு மூன்று நல்ல படங் கள் வந்தன. பிறகு கண்கட்டி வித்தைகள் நிறைந்த குப் பைப் படங்களே மலிந்துவிட்டன, இரு சகோதரர்கள்' மேனகா குமாஸ்தாவின் பெண் போன்ற  நல்ல கதை களை நல்ல படங்களாக ஏன் தயாரிக்கக்கூடாது? கதை

களுக்குப் பஞ்சமா? கதாசிரியர்களுக்குப் பஞ்சமா? வீணாக பழியை பொதுமக்கள் பெயரில் போட்டுவிட்டு வீணத்தனமான படங்கள் பிடிப்பவர்களைத் திருத்த இனி மே ல் ஒரே வழிதான் இருக்கிறது. பத்திரிகைகளை நம்பிப் பயனில்லை. பத்திரிகைகள் படமுதலாளிகளின் தயவை நம்பி வாழ்க்கை நடத்தத் தவிக்கின்றன. அதிலும் காளான்கள் போல, பத்திரிகை கள் முளைத்து வரும் இன்று, விளம்பரங்கள் பெறுவதற் காக முதலாளிகளை மகிழ்விக்க என்ன செய்யவேண்டுமோ, அந்த வகையில்தான் காரியங்கள் சாதிப்பார்கள். உண் மைக்காக உண்மையை துணிந்துகூற விரும்பா சினிமாப் பத்திரிகைகள். ஆகவே, காரசாரமான விமர்சனங்கள் எழுதி, படங்களின் உண்மைத் தன்மையை அம்பலப் படுத்த விரும்புகிற கலா ரசிகர்களுக்கு பத்திரிகைகளில் இடம் கிடைக்காது. ஆகவே, கலாரசிகர்கள், திறமையைப் பாராட்டி தவ றுகளைக் கண்டிக்கும் விருப்பு வெறுப்பற்ற விமர்சகர்கள், கலைஞர்கள் எல்லோரும் தங்கள் எதிர்ப்பை-அங்கும் இங்குமாகச் சிதறிவிடும் எதிர்ப்பை-ஒருமுகப்படுத்த,