பக்கம்:எப்போதும் இருப்பவர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொன்னாள். எழுதும்போது, அவன்மேல், ரோஜா இதழ் களை உதிர்த்துக்கொண்டே இருந்தாள். - - கவிதை முடிந்தது அவர்கள் முத்தம் முடிந்தது !! அந்த இரவும். முடிந்தது !!! - மொட்டைச் சுவரிலே, மரத் தின் இடுப்பிலே, விளக்குக் கம்பத்திலே, கல்லறை வாச லிலே, ஆலயக் கதவிலே, எழுகிய கவிதையின் கையெழுத் துக் காகிதங்களை ஒட்டினாள். - -

- கண் வைத்தியம் செய்து கொள்ள, டாக்டரிடம் போனேன். மருந்து கொடுத்தான். குடித்தேன். மயக்கம் வந்தது. அவன் மடியில் விழுந்து விட்டேன். அதற்குப் பிறகு, இந்த உலகம் எனக்குக் தெரியவில்லை. கொஞ்ச நோம் கழித் து, ஒருவித புதிய உணர்ச்சியால் விழித்துக் கொண்டேன். விழித்ததும், இந்த உலகத்தைப் பார்ப்பதற்கு முன், என் உடம்பின்மேல், அந்த டாக்டரைப் பார்த்தேன். என்னைக் கெடுத்துக் கொண்டிருந்த அவன், உடனே ஓடி விட்டான். அவன், -அங்க டாக்டர், ஒரு பெரிய மனிதன்-இந்த ஊருக்கு ; உங்களுக்கு. அவன்.ஒரு மஹா பாவி-எனக்கு ; நம் வேதத்துக்கு. அவன்தான், இந்த மேரியைக் கெடுத்த வில்லியம் ஒயில்டு.” -

கவிதையின் இந்த வாசகம் பலர் கண்ணுக்கும் பட்டது. இரண்டொரு இரவு நேரத் துக்குள் முழு அயர்லாந்துக்கும் தெரிந்து விட்டது. இந்த பிரஸ்தாபத்தைக் கேட்டும், வில்லியம் தனக்குக் காதுகளே இல்லாதவன் போல நடித்துக் கொண்டான். வில்லியத் தைக் கண்டு சிரித்த ஜனங்கள், மேரியைக் கண்டும், அவன் தகப்பன் ட்ராவர்ஸைக் கண்டும் சிரித்தது. பேராசிரியன், தாங்க முடியாத அவமானத்தால் தலை குனிந்தான். டாக்டர் மீது வழக்கு தொடுத்தான். வில்லியம்-மேரி வழக்கு ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது. விடாமல் ஆறு

- சுரதா 23