பக்கம்:எப்போதும் இருப்பவர்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புஷ்கின்



இங்கிலாந்துக்கு ஷேக்ஸ்பியர், இத்தாலிக்கு தாக்தே, பிரான்சுக்கு வால்டேர், ஜெர்மனிக்கு கதே-இதுபோல ரஷ்யாவுக்கு புஷ்கின்:!

இந்த புஷ்கின், ஒரு வருஷம் குறைந்த பத்தொன்பதாவது நூற்றாண்டில் பிறந்தவன். இவன் தன் பதினேராவது வயதில் பிரஞ்சு மொழியில் எத்தனை எழுத்துக்கள், வார்த்தைகள், இலக்கியங்கள், உண்டோ அத்தனை படித்துத் தீர்த்து விட்டான் !

பிறகு, லைசி பள்ளிக்கூடத்தில் ஆறு வருஷம் படித்தான். சுதந்தரம், சமத்துவம், சகோதாத்துவம்- இவைகளைப் பற்றி இங்கேதான் புரிந்துகொண்டான் ; சொன்னன் ; பக்கம் பக்கமாக எழுதினன்.

இவன் பேச்சில் ஆவேசம், எழுத்தில் நெருப்பு, ஆதரிக்க கூட்டம்-இவைகள் இருப் பதைக் கண்டு அரசாங்கம் பயந்தது. இவனே பயமுறுத்தியது . ஆறு வருஷங்கள் தேசத்துக்கு வெளியே அனுப்பி, போலிசின் பார்வைக்குள் வைத்திருந்தது. இந்த சமயத்தில், பைசன், வால்டேர், வால்டர் ஸ்காட், ஷேக்ஸ்பியர் -இவர்கள் எழுதிய புஸ்தகங்களை எல்லாம் புஷ்கின் படித்து முடித்தான். இப்படி இவன் 'பாதுகாப்பு கைதியாக'இருந்தபோது எழுதிய 'காவ்ரிலியாடா' என்ற சாஸ்திக காவியத்தை அரசாங்கம் இரண்டு ஐம்பது வருஷங்களுக்கு தடுத்து விட்டது !

புஷ்கின் பிறர் தேசத்தில் இருந்தபோது, பிறந்த தேசத்தில் புரட்சி ஏற்பட்டது. அதாவது, 14-12-1825 காலை 9-45 மணிக்கு மீன்

எப்போதும் இருப்பவர்கள்