பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 மக்கள் கேட்கவில்லை; அவர்கள் போனால் போகிறார்கள்; நீங்கள் மேலே பாடுங்கள் என்று எதிர்கோஷமிட்டார்கள். 'இறப்பும் பிறப்பும் இரவும் பகலும் போல' என்று அவர்கள் நினைத்தார்களோ என்னவோ? அப்போது அங்கே வந்திருந்த டாக்டர் திரு பி.வரதராஜுலு நாயுடு, 'அமைதி, அமைதி!' என்ற கையமர்த்திக்கொண்டே மேடையின் மீது ஏறினார். 'இப்படி ஒரு கூட்டத்தை இதற்கு முன் சேலத்தில் கண்டதில்லை. ஏன், ஆனானப்பட்ட காந்திமகான் இங்கே வந்திருந்தபோது கூட அவரை வரவேற்க இவ்வளவு பெரிய கூட்டம் இந்த இடத்தில் கூடவில்லை. தமிழிசையின் மகத்தான சக்தியை நான் இப்போதுதான் கண்கூடாகக் காண்கிறேன். ஆயினும் நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. இசைவெறியால் மின்சார வெறிக்கு நம் சகோதரர்களில் இருவர் பலியாகிவிட்டனர். மூன்றாமவர் சந்தேகத்துக் கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்தச் சோக நிகழ்ச்சிகள் பாகவதரின் இதயத்தைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கின்றன. மக்கள் அபிமானத்துக்காக அவர் தம்முடைய மனிதாபிமானத்தைக் கைவிடவிரும்ப வில்லை. ஆகவே தம்மை மேற்கொண்டு பாடச் சொல்ல வற்புறுத்தாமல் உங்களைக் கலைந்து செல்லுமாறு வேண்டுகிறார். இது நியாயமாகப் படவில்லையா உங்க ளுக்கு குயிலின் பாட்டுக்கூடத் தன்னிச்சையாகப் பாடும்போது தான் இனிக்கும்; எடுக்கும். வற்புறுத்திப் பாடச்சொன்னால் இனிக்கவும் இனிக்காது; எடுக்கவும் எடுக்காது. அதே மாதிரிதான் மனிதனும், அவரைத் தயவுசெய்து வற்புறுத்திப் பாடச் சொல்லாதீர்கள்.அப்படிப் பாடும் பாடல் எடுபடாது. எங்கே, 'இந்தச் சந்தர்ப்பம் தவறினால் இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்காமலா போய்விடப் போகிறது? என்று மனத்தைத் தேற்றிக்