பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ஆனால் எப்படி? அது கொடுத்தவருக்கும், வாங்கியவருக்கும் மட்டுமே தெரியும்! 'அப்படியானால் அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது?’ என்று நீங்கள் என்னைக் கேட்கிறீர்களா? வாங்கியவர்களின் சொந்தக்காரர்களில் ஒருவர் அண்மையில் சொல்லித்தான் அது எனக்குத் தெரிந்தது. எப்படி? பாகவதரின் நன்கொடை! ஆடுவதும் பாடுவதும்... வருமானத்தைப் பற்றிய கவலை இல்லா விட்டாலும் அதற்குரிய வரியைக் கட்டித் தொலைக்க வேண்டுமே என்ற கவலை இந்த உலகத்தில் சில புண்ணியாத்மாக்களுக்கு உண்டு. அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் கலைஞர்கள். அந்தக் கலைஞர்களில் ஒருவராக வாழ்ந்த பாகவதருக்கும் அக்கவலை இருந்தது. அதன் காரணமாக அவர் ஒரு சமயம் சொன்னார்: 'மரணம் ஒரே ஒரு முறைதான் வந்து மனிதனைக் கொல்கிறது; வரியோ வருடாவருடம் வந்து அவனைக் கொன்று கொண்டே இருக்கிறது" இத்தகைய வரியிலிருந்து தப்புவதற்காகவே புகழ் பெற்ற கலைஞர்களில் சிலர் உதவி நிதி நாடகம் என்றும், உதவிநிதிக் கச்சேரி என்றும் ஆடுவதும், பாடுவதும் உண்டு. பாகவதரோ அவர்களுக்கு முற்றிலும் விரோதமாயிருந்து வந்தார். மூக்கால் அழுதுகொண்டாவது அவர் கட்ட வேண்டிய வரியைக் கட்டித் தொலைப்பாரே தவிர, அதற்காக உதவி நிதிநாடகம் என்றும், உதவி நிதிக் கச்சேரி என்றும் சொல்லி ஊருக்கு மட்டுமல்ல; அரசாங்கத்துக்கும் 'கைகொடுக்க மாட்டார். அதற்குக் காரணம் வரி என்று ஒன்று இல்லாமல் அரசாங்கம் இயங்கமுடியாது