பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 இதில் ஏதாவது நயவஞ்சகம் இருக்குமோ, 'நல்ல பிள்ளை' என்று பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்லி விட்டு கால்வrட் என்று போனால் யார் அதிகப்பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்குக் 'கால்ஷிட்" கொடுத்துவிட்டு 'இன்னும் ஆறு மாதங்களுக்கு இந்தப்பக்கம் வராதீர்கள்; எனக்கு வேறு வேலை இருக்கிறது!’ என்று கழுத்தறுப்பாரோ! எனப் பயந்த ஏ.எல்.ஆர்.எம். 'உண்மையாகத்தானே சொல்கிறீர்கள்?" என்று மீண்டும் கேட்க, 'அதுவே நான் வழிபடும் கடவுள்; என்னை நம்புங்கள்!'என்றார் பாகவதர் வினயத்துடன். அதற்கு மேல் டைரக்டராக யாரைப் போடுவது என்று அவர்கள் யோசித்தார்கள். அப்போது வெற்றிகரமான டைரக்டராக மட்டுமல்ல, கைராசிக்கார டைரக்டராகவும் விளங்கிவந்தவர் திரு.கே.சுப்பிரமணியம். அவரைப் பிடித்துப்போட்டார்கள். அந்த நாளில் அடையாறிலிருந்த ஒரு ஸ்டுடியோ வில் 'ஷா9ட்டிங் ஆரம்பமாயிற்று. அது ஆரம்ப மான வேளையோ என்னவோ ஏ. எல்.ஆர். எம்முக்கும் அவருடைய கூட்டாளிக்கும் எடுக்கும்போதே ஏதோ ஒர் அபிப்ராய பேதத்தின் காரணமாகச் சண்டை வந்துவிட்டது. 'இனி இருவரும் சேர்ந்து தொழில் செய்வது உங்களுக்கும் நல்லதல்ல, எனக்கும் நல்லதல்ல; பிரிந்துவிடுவோம்’ என்றார் ஏ.எல்.ஆர்.எம். 'அப்படியானால் நான்போட்ட பணத்தைக் கொடுத்துவிடுங்கள்' என்றார் கூட்டாளி. 'இப்போது என் கைவசம் பணமில்லை; படம் முடிந்த பிறகு கொடுக்கிறேன்!" என்றார் அவர். 'முடியாது; இப்போதே கொடுக்க வேண்டும்' என்றார் இவர்.