பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 'கொடுக்காவிட்டால் என்ன செய்வீர்கள்?" என்றார் அவர். 'அதை இப்போது சொல்வானேன்? கொஞ்சம் பொறுத்துப் பாருங்கள்; ' என்று கறுவிக்கொண்டே வெளியே வந்தார் இவர். வந்தவர் நேராக வக்கீல் வீட்டுக்குப் போனாரா என்றால், இல்லை; கோர்ட்டுக்குச் சென்றாரா என்றால் இல்லை; ஸ்டே ஆர்டர் வாங்கி 'ஷல்ட்டிங்கை நிறுத்தினாரா? என்றால் அதுவும் இல்லை! பின் என்னதான் செய்தார்? என்றைக்காவது ஒருநாள் பவளக்கொடி படப் பிடிப்பு நடக்கிறதென்று தெரிந்தால் போதும். மிகப்பெரிய 'பல்ப் ஹாரனுடன் கூடிய ஒரு டுரர் காரில் அவர் ஸ்டுடியோ வாசலுக்கு வந்துவிடுவார். 'ஸைலன்ஸ் ப்ளீஸ்" ரெடி பார் டேக், ஸ்டார்ட் என்று டைரக்டர் சொல்ல, உதவி டைரக்டர் டப்' என்ற க்ளாப் அடிக்க வேண்டியதுதான் தாமதம், ஸ்டுடியோவாசலில் டுரர்காருடன் தயாராக வந்து காத்திருக்கும் கூட்டாளி, 'பாம், பாம், பாம், பாம்ப பாம்!” என்று ஹாரன் அடிக்க ஆரம்பித்துவிடுவார். 'கட், கட்!" என்று எரிச்சலுடன் கத்திவிட்டு, 'இதென்ன நியூ சென்ஸ்", என்பார் டைரக்டர். படாதிபதி ஏ.எல்.ஆர்.எம். வெளியேவந்து, உம்முடைய வேலைதானா? மரியாதையாக வெளியே போகிறீரா, இல்லையா? என்பார்; 'என் பணத்தைக் கொடும், போகிறேன்!” என்பார் அவர். 'கொடுக்கமுடியாது; உம்மால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொள்ளும் என்று சொல்லி விட்டு ஏ.எல்.ஆர்.எம். உள்ளே வருவார். 'மறுபடியும் 'ஷாஇட்டிங்' ஆரம்பமாகும். ஸ்ைலென்ஸ் ப்ளீஸ் ரெடி பார்டேக், ஸ்டார்ட்!" என்று