பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 அருந்தத் தயங்குவார்? மனைவியைத் தவிர, பிற மங்கை களுடன் பேச அஞ்சுவார்? இப்பொழுது எழுத்தாளர்களே அல்லவா பெங்களூருக்கும் பாண்டிச்சேரிக்கும் போனால்தான் 'மூட் வருமென்று சொல்கிறார்கள்! கடவுள், மனிதன் தன்னை எளிதில் நெருங்கி விடக்கூடாது என்பதற்காகவோ என்னவோ, மங்கை என்று ஒருத்தியைப் படைத்தான். அவள் தன்னை ஆட்டிப் படைப்பது போதாதென்று மனிதன்'மது' என்ற ஒன்றையும் தனக்குத்தானே தயார் செய்து கொண்டுவிட்டான்! இந்த இரண்டு மற்ற துறைகளில் நடமாடு வதைவிட, சினிமாத்துறையிலே அதிகமாக நடமாடு கின்றன. காரணம், அவற்றுக்கு அங்கே சொந்தப் பணந்தான் வேண்டும் என்பதில்லை; எது எதையோ எதிர்பார்த்து வரும் பிறத்தியார் வீட்டுப் பணமே அவற்றுக்கு அங்கே கை கொடுக்கிறது. இதனால் படாதிபதிகள் மட்டுமா பல விதமான சோதனைக்குள்ளாகிறார்கள்? அவர்களோடு தொழிலில் சம்பந்தப்பட்ட அனைவருமே சோதனைக் குள்ளாகிறார்கள்! இதற்குப் பாகவதர் மட்டும் எப்படி விதிவிலக்கா யிருக்க முடியும்? அதிலும், அந்த நாள் அழகு மன்னனாக அவர் இருந்து கொண்டு? 'அம்பிகாபதி 'யில் தம்முடைய காதலி அமரா வதி'யாக நடித்த திருமதி சந்தானலட்சுமியின் தலையோடு தலைசேர்த்து, " சந்திர சூரியர் போம் கதி மாறினும் விழினும் நமக்கென்ன? இந்த இன்பமே சொந்தம தானால் வானுலகும் வேண்டாம்!” என்று அவர் பாடி நடித்தாலும் நடித்தார், நிஜமாகவே பல பெண்கள் அவருடைய தலையோடு தலைசேர்த்து, அதே மாதிரி வந்து விட்டார்கள்.