பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 'தனிநபர் வழிபாடு தமக்கும் உடன்பாடு இல்லை என்பதை அந்த நாளிலேயே செயலில் காட்டியவர் எம்.கே.டி. மகாத்மா காந்தியிடம் அவர் அளவற்ற மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தது என்னவோ உண்மைதான்; 'காந்தியைப் போலொரு சாந்த சொரூபனைக் காண்பது எளிதாமோ? என்று அவர் பாடியதும் என்னவோ உண்மை தான். ஆனால் அவற்றுக்காக அவர் தமக்கென்ற ஒரு தனிவழி வகுத்துக் கொண்டிருந்ததை விட்டுக் கொடுக்கத்தயா ரில்லை. 'இந்திய விடுதலைக்கு இணங்காதவரை இரண் டாவது உலக மகா யுத்தத்தில் இந்தியா பிரிட்டிஷாரோடு ஒத்துழைக்காது' என்றார் காந்திT. 'இந்திய விடுதலை வேறு; இரண்டாவது உலகமகாயுத்தம் வேறு' என்றார் பாகவதர். இப்படிச் சொன்னதோடு அவர் நிற்கவில்லை. அப்போது சென்னை கவர்னராயிருந்த ஸர் ஆர்தர் ஹோப், 'யுத்த நிதிக்காக நீங்கள் எங்களுக்குச்சில நாடகங்கள் நடத்திக் கொடுத்து உதவ வேண்டும்' என்று கேட்டுக் கொண்ட போது' அதற்கென்ன, நடத்திக் கொடுக்கிறேன்!” என்று நடத்திக் கொடுத்தார். அப்போது புகழ் பெற்ற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராயிருந்த திரு சத்தியமூர்த்தி சொன்னார் - "ஒய், பாகவதரே! யுத்த நிதிக்கு நீர் நாடகமா நடத்திக் கொடுக்கப் போகிறீர், நாடகம்? இரும் இரும், உம்முடைய பாகவதர் பட்டத்தையே நான் பறிமுதல் செய்து விடுகிறேன்!” என்று. அதைக்கேட்ட பாகவதர் என்ன செய்தார்? - வேறொன்றும் செய்யவில்லை; சிரித்தார். அதற்குப் பின் கவர்னர் ஹோப் தலைமையில் ஊருக்கு ஊர் பாகவதரின் நாடகம் நடந்தது; பணமும் லட்சக்கணக்கில் குவிந்தது.