பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 ஒரு லட்சம் பேர் அன்றைய தினசரிப் பத்திரிகைகள் பலவற்றில் எது முக்கியச் செய்தி என்கிறீர்கள்? - இதுதான் முக்கியச் செய்தி! அத்தனை பேர் கூடியிருந்தும் அங்கே நிலவிய அமைதி... ஒரு தும்மல் சத்தம் இல்லை; ஒர் இருமல் சத்தம்கூட இல்லை. அதுமட்டுமா?'அட, கச்சேரி கெடக்குது; உங்க பையனுக்கு மெடிகல் காலேஜிலே இடம் கெடச்சிடிச்சா? எவ்வளவு கொடுத்தீங்க?' என்பது போன்ற தகவல் சேகரிப்புகளோ 'மாமியார் வந்திருந்தாளே, ஊருக்குப் போயிட்டாளா? என்பது போன்ற துக்கவிசாரிப்புகளோ அங்கே நிகழவில்லை. தங்களுக்குள்ள எத்தனையோ அவசர அவசிய அலுவல்களுக்கிடையேயும் ஒரு மரியாதைக்காக வந்து கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போய் விடுவார்களே - ராஜா சர் முத்தையா செட்டியார், சர் ஆர். கே. சண்முகம் செட்டியார், சர். சி. பி ராமசாமி அய்யர் போன்றவர்கள் - அவர்கள்கூட அன்று கடைசிவரை உட்கார்ந்திருந்தார்கள். ஆம், அன்றொரு நாள் பாகவதரின் பாட்டுக்குப் பாம்பு கட்டுப்படவில்லையா? அதே மாதிரி அன்று மக்களும் கட்டுப்பட்டிருந்தார்கள். கச்சேரி ஆரம்பமாயிற்று. 'மன்னன் என்னமாய்ப் பாடுகிறான்' என்று ஒரு பக்கம் வியப்பு: தமிழிசை இவனால் நிச்சயம் தழைக்கும் என்று இன்னொரு பக்கம் நம்பிக்கை; எந்த ராகத்தையும் எந்தவிதமான பிரயாசையும் அங்கசேஷ்டையும் இல்லாமலே இவனால் எப்படி இவ்வளவு அட்சர சுத்தமாகப் பாட முடிகிறது?’ என்று