பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

198 கனகசபேசன் திருநடம் காண விரைந்தேனே!... உண்மை அநீதியின் கண்களுக்கு மட்டுமல்ல. நீதியின் கண்களுக்கும் சில சமயம் தெரியாமற் போ. விடுவதுண்டு. அதைத்தான் 'விதி' என்று அந்த நாளில் சரி, இந்த நாளிலும் சரி - சிலர் சொல்லி வந்தார்கள். சொல்லி வருகிறார்கள். - எது எப்படியிருந்தாலும் ஒன்று மட்டும் உண்மை - அமைதியற்ற இந்த உலகில் மனிதன் ஓரளவு அமைதியுடன் வாழ வேண்டுமானால் அவன் தன்னுடைய செய்கைகளுக்கும், அவற்றால் தான் அனுபவிக்க நேரும் கஷ்ட நஷ்டங்களுக்கும் அவ்வப்போது ஏதாவது ஒரு சமாதானம் தேடிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த சமாதானங்களில் ஒன்றே விதி. இந்த விதி வசத்தாலோ என்னமோ, இரண்டு வருடங்கள், இரண்டு மாதங்கள், பதின்மூன்று நாட்கள் சிறைவாசம் செய்த பாகவதர் 25.4.47 அன்று விடுதலை யானார். சிறைக்கு வெளியே கூடியிருந்த சினிமா உலக பிரமுகர்களும், ரசிகர்களும் ஏக ஆரவாரத்தோடு அவரை வரவேற்றனர். அவர்களுக்கெல்லாம் தம்முடைய நன்றியைத் தெரிவித்து விட்டு, பாகவதர் நேரே வடபழனி ஆண்டவர் சந்நிதிக்குச் சென்றார். 'எல்லாம் உன் செயல்' என்று இரு கைகளையும் கூப்பி அவரைத் தொழுதுவிட்டு, அன்றிரவே திருச்சிக்கு பயணமானார். விடுதலையான பாகவதர் இந்தப் படத்தில் நடிக்கப் போகிறார். அந்த படத்தில் நடிக்கப்போகிறார்' என்று பல வதந்திகள் கிளம்பின. அவற்றையெல்லாம் பொய்யாக்கி விட்டு, அவர் 'நரேந்திரா பிக்சர்ஸ்' என்று முற்றிலும் தமக்கே சொந்தமான ஒரு கம்பெனியை ஆரம்பித்தார். அதன் முதல் தயாரிப்பாக 'ராஜமுக்தி' உருவாயிற்று. இது பாகவதரின் பத்தாவது படம். இந்தப் படத்தின் திரைக்கதை