பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

203 சியாமளா'வும், பதின்மூன்றாவது படமாகப் 'புதுவாழ்வு’ம் வெளிவந்தன. அவை 'அமர கவி'க்குக் கிடைத்த அற்ப சொற்ப வெற்றியையும் பொய்யாக்கித் தோல்வியே அடைந்தன. இந்த நிலையில்தான் தம்மைக் கண்டதும் ஒரு காலத்தில் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தலட்சோப லட்சம் மக்களையும் அவர் பார்த்தார்; தம்மைக்கண்டும் காணாதது போல் போன மக்களையும் அவர் பார்த்தார். பார்த்த பின் என்ன செய்தார்? - சிரித்தார்; சிரித்துச் சிரித்து மனம் சலித்தார். அதன் பயனாக எழுந்தது விரக்தி; பிறந்தது வேதாந்தம்! - ‘மனிதன் கைவிட்டாலும் கடவுள் தம்மைக் கைவிட மாட்டார்' என்று அவர் நம்பினார். அந்தக் கடவுளோ * அவருடைய கண்களைப் பறித்துவிட்டு வேடிக்கை பார்த்தார்! கொடுமை, கொடுமையிலும் கொடுமை! கடைசியாக அவர் தஞ்சமடைந்த இடம் தஞ்சை மாரியம்மன் கோயில். அங்கேதான் திரு எஸ். எஸ். ராஜேந்திரன் அவரைச் சந்தித்து, வாருங்கள்; உங்களுக்கு நான் கனகாபிஷேகம் செய்து வைக்கிறேன்! என்றார்; சொன்னதே போதும்; செய்து வைத்த மாதிரி! என்று சொல்லிவிட்டார் பாகவதர். அவர் பார்க்காத கனகமா? அவர் பார்க்காத வைர வைடூரியங்களா? எல்லாவற்றையும் பார்த்து, அனுபவித்து, அலுத்துப் போன அவருக்கு, அப்போது இந்த உலகத்தில் எதுவுமே வேண்டியிருக்கவில்லை. எல்லாவற்றையும் தாண்டிய நிலையில் அவர் நின்றார்!