பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் திரு எம்.ஏ.வேணுவின் பெருமுயற்சியில் 'சிவகாமி' உருவாயிற்று. இது பாகவதரின் பதினான்காவது படம். இந்தப்படம் முடிவதற்கு முன்னரே அவருடைய ஆயுள் முடிந்துவிட்டது. அந்நாள் 1-11 - 55 ஆகும். அவருடைய மறைவுக்குப்பின் மாண்புமிகு நெடுஞ்செழியன் சொன்னார்: எழிலிசை மன்னர் மறைந்தார். அவர் தந்த இன்னிசைத்தட்டுக்களும், சிறப்புமிக்க திரைப்படங்களும் நம்மிடம் இருக்கின்றன. அவற்றை என்றும் எப்பொழுதும் பாதுகாப்போம். சொன்னதைச் செய்யக்கூடிய வசதியும் வாய்ப்பும் இப்போது அவருக்கும் அவருடைய சகாக்களுக்கும் இருக்கின்றன. 'செய்வார்கள்' என்று நாம் நம்பலாம்.