பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒரு கடிதம் : தந்தையைப் போலவே தனயனும் புகழுக்கு விளம்பரம் தேடாமல் பாகவதர் பலருக்குப் பண உதவி செய்திருப்பது பற்றிப் 'பாகவதர் கதை'யில் எழுதியிருந்ததைப் படித்து நான் வியப்படைந்தேன். பாகவதரைப் போலவே அவர் மகன் ரவீந்திரனும் அவருடைய குணத்தைப் பெற்றிருக்கிறார் என்பது நான் நடைமுறையில் கண்டறிந்த உண்மையாகும். நானும், பாகவதர் மகன் ரவீந்திரனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். திருச்சி தேசியப்பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு முதல் பள்ளி இறுதித்தேர்வு வரை ஒன்றாகப் படித்தவர்கள். நானும் ரவீந்திரனும் திருச்சி ஜங்ஷனில் ரயிலேறிக் கோட்டை ஸ்டேஷனில் இறங்கிப் பள்ளிக்குச் சென்று படித்து வருவது வழக்கம். மதிய உணவு அவருக்குத் தினமும் பள்ளிக்கு இருக்கும். 'ஏன் இத்தனை பெரிய கேரியர்? இவ்வளவு சாதமா சாப்பிடுகிறார்?' என்று நினைத்து, அதன் காரணத்தை அறிந்து கொள்ள நான் ஆவலாக இருந்தேன். மற்றொரு நண்பர் அதன் காரணத்தை விளக்கியபோது என்மகிழ்ச்சி எல்லை கடந்தது. ‘நம் வகுப்பிலே படிக்கும் ஏழை மாணவரான (பெயர் (ஞாபகமில்லை )...க்கும் சேர்த்துத்தான் அந்தச் சாப்பாடு. அவருக்குத் தாயும் தந்தையும் இல்லை. மூன்று ஆண்டுகளாக நம் நண்பர் ரவீந்திரன் தான் அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வருகிறார்' என்று அவர் கூறினார். அதைக் கேட்டதும் என் உள்ளம் பூரித்தது. 'என்னே