பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 வில்லை. அதனாலேயே நடிப்பதை நான் என்னோடு நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று இருந்தேன்...' 'நீர் சொல்வது ஒரு விதத்தில் சரிதான் என்றாலும், முற்றிலும் சரி என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், நாடகத்தில் நடிக்காமலேயே பலர் வாழ்க்கையில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களைப் பார்க்கும்போது மனிதன் பிறக்கும்போதே நடிகனாகப் பிறக்கிறானோ என்ற சந்தேகம் கூடச் சில சமயம் எனக்கு வந்துவிடுகிறது. ஆகவே அதற்காக நீர் அஞ்சவேண்டாம். எனக்குத் தெரிந்தவரை, தான் பிறந்த வீட்டுக்கு மட்டும் விளக்கேற்றி வைக்கத் தியாகராஜன் பிறந்திருக்கவில்லை. இருண்டு கிடக்கும் கலை உலகத்துக்கும் விளக்கேற்றி வைக்க அவன் பிறந்திருக் கிறான் என்றே நான் நினைக்கிறேன். அதை நீர் ஏன் தடுக்க வேண்டும் கிருஷ்ணமூர்த்தி ஒரு கணம் யோசித்தார்; மறுகணம், 'இல்லை; தடுக்கவில்லை, உங்கள் விருப்பம் எப்படியோ அப்படியே செய்யுங்கள்' என்றார் பெரு மூச்சுடன். நடேசய்யர் மகிழ்ச்சியுடன் அவரிடமிருந்து விடை பெற்றார். உள்ளே இருந்தபடி இவர்களது உரையாடலை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த தியாகராஜனோ ஒர் எம்பு எம்பிக்குதித்து ஒடித் தன் தாயாரின் கால்கள்.இரண்டையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டு, 'அம்மா, அம்மா! அப்பா சம்மதித்து விட்டார். அம்மா' என்று உற்சாகத்தின் உச்சியில் நின்று கத்தோ கத்து' என்று கத்தினான். “எதற்குடா சம்மதித்து விட்டார்?' என்றாள் அம்மா அமைதியாக நான் நாடகத்தில் நடிக்க அப்பா சம்மதித்து விட்டார், அம்மா' என்றான் பையன், தலைகால் புரியாமல்.