பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கொன்றவனைக் கொன்றே போட்டுவிடத் துணிய வேண்டும். அந்த அளவுக்கு ஜனங்களை உணர்ச்சி வசப்படுத்தக் கூடிய அழகு வாய்ந்த ஒரு பையன், சர்வ லட்சணங்களும் பொருந்திய ஒரு பையன் எனக்குத் தேவை. என்ன சொல்கிறீர்?" 'நான் சொல்ல என்ன இருக்கிறது? அப்படி ஒரு பையனை நான் உங்களுக்கு எங்கிருந்து தேடிக் கொடுப்பேன்?' என்று கிருஷ்ணமூர்த்தி கையைப் பிசைந்தார். நடசேய்யரோ கடகட வென்று சிரித்தார்; சிரித்து விட்டு 'சுவாமி தேடாமலேயே கொடும், உம்முடைய தியாகராஜனை' என்றார். 'தியாகராஜனையா எதற்கு?' என்று திடுக்கிட்டுக் கேட்டார் கிருஷ்ணமூர்த்தி. இருக்காதா? -அவனை யாராவது அடித்தால், அடித்தவனை ஜனங்கள் அடிக்கவேண்டும்; அவனை யாராவது கொன்றால், கொன்றவனை ஜனங்கள் கொன்றே போட்டுவிடவேண்டும் என்றெல்லாம் சொல்லிவிட்டுக் கேட்டால்? “என்ன, பயந்துவிட்டீரா? பயப்படாதீர் உம்முடைய மகனை நான் அந்த மாதிரி சோதனைகளுக்கெல்லாம் உள்ளாக்கிவிடமாட்டேன். அடுத்த மாதம் நம்முடைய ரசிக ரஞ்சனி சபாவில் 'அரிச்சந்திரா நாடகத்தை நான் அரங் கேற்றவிருப்பதுதான் உமக்குத் தெரியுமே! அதில் தியாகராஜன் லோகிதாசனாக நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அதற்கு வேண்டிய சர்வ லட்சணங்களும் அவனிடம் பொருந்தியிருக்கின்றன. நீர் என்ன சொல்கிறீர்?" என்றார் நடேசய்யர் மீண்டும். 'கலை என்ற அம்சத்தை மட்டும் வைத்துப் பார்த்தால், நாடகக்கலை என்னவோ நல்ல கலைதான். ஆனால் அதில் நடிப்பவர்கள் ஏனோ வாழ்க்கையிலும் நடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்; அதுதான் எனக்குப் பிடிக்க