பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 'சம்மதம்தான், மாமா' என்றான் அவன். 'சபாஷ், மாப்பிள்ளை' என்றார் அவர். 'மறுநாளே வாதாபி கணபதிபஜே என்று சங்கீதச் சிட்சைஆரம்பமாயிற்று. அதைத் தொடர்ந்து பலக் கிருதிகள், கீர்த்தனைகள், சாகித்யங்கள், சிந்துகள்... இந்தச் சிந்துகளில் நொண்டிச்சிந்து' என்று ஒன்று உண்டல்லவா? அந்தச் சிந்தில், காடு நின்று காவல்கொண்டு பாடுகின்ற பாவையே என்று ஒரு பாடல், அந்தப் பாடலை ஒரு நாள் தன்குருவுக்கு எதிரே நின்று தியாகராஜன் பாடக்கேட்ட ஒருவர், மறுநாள் அவன் வீட்டுக்கு வந்தார். தன்னைவிட வயதில் கொஞ்சம் பெரியவராகத் தோன்றிய அவரை, 'யார் நீங்கள், எங்கே வந்தீர்கள்?' என்று மெல்ல விசாரித்தான் தியாகராஜன். நான் பொன்னுவய்யங்கார் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருக்கிறேன், என் பெயர் வெள்ளியங்கிரி. உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்' என்றார் அவர். "எதற்கு?" 'எனக்கும் நொண்டிச் சிந்து பாடவேண்டும் போலிருக்கிறது; கொஞ்சம் சொல்லித் தரவேண்டும்." 'யார், நானா?” "ஆமாம்.' தியாகராஜன் சிரித்தான்; 'ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டார் வந்தவர். 'போயும் போயும் என்னையாகுருவாகக் கொள்ளப் பார்க்கிறீர்கள் நீங்கள்? நான் இன்னும் மாணவன் ஐயா மாணவன்!” என்றான். 'அது தெரியும் எனக்கு; ஆனாலும் அய்யங்கார் என்னைச்சீடனாக ஏற்றுக்கொள்வதற்கு வேண்டிய பாக்கியம் எனக்கு இன்னும் கிட்டவில்லை. அதனால் தான்...'