பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 கர்த்தாவின் மனோநிலை எப்படி இருந்திருக்கும் என்பதையும் கவனித்துப் பாடுகிறான்' 'என்ன கற்பனை, என்ன கற்பனை' 'ராகத்துக்காக எந்த வார்த்தையையும் அவன் சிதைக்கவில்லை, பார்த்தீர்களா?” "ஆலாபனைகளையெல்லாம் நெடில் எழுந்து வரும் இடத்தில் வைத்துக் கொள்கிறான்; குறில் எழுத்து வரும் இடத்தில் அதைப் போட்டுக் குழப்புவதைத் தவிர்க்கிறான்' 'அருவருக்கத் தக்க அங்க சேஷ்டைகள்...? 'ஊஹாம்!' 'தமிழ் இசைக்கு இவன் கொடுக்கும் பிரதானம்...' 'மெச்சத் தக்கது சுவாமி, மெச்சத்தக்கது' இத்தகைய பராட்டுரைகள் கூட்டத்தினரிடையே யிருந்து மட்டும் வந்துகொண்டிருக்கவில்லை; பிள்ளையவர் களிடமிருந்தும் வந்து கொண்டிருந்தது. அது மட்டுமல்ல. 'இதுவரை எத்தனையோ இளம் வித்வான்கள் எனக்கு முன்னால் பாடியிருக்கின்றனர். அவர்களில் யாரும் இவனைப்போல் இத்தனை தைரியமாக எனக்கு முன்னால் பாடி இது வரை நான் கேட்டதேயில்லை' என்று வேறு சொல்லிவியந்தார். தியாகராஜனோ, "எல்லாம் அம்பாள் அருள்; இல்லாவிட்டால் தங்களைப் போன்ற பெரியவர் களின் அன்பும் ஆசியும் எடுக்கும்போதே எனக்குக் கிடைத் திருக்குமா?’ என்றான் தன்னடக்கத்துடன். இந்த நிலையில் முதலில் அவனுக்கு மிருதங்கம் வாசிக்க மறுத்த தட்சணாமூர்த்தி ஆச்சாரி என்ன நினைத்தார் என்கிறீர்கள். அடாடா, எவ்வளவு நல்ல சந்தர்ப்பத்தை நாம் இழக்க விருந்தோம்? இவனுக்கு மிருதங்கம் வாசிப்பதால் இப்போது நம்முடைய அந்தஸ்து உயர்ந்து கொண்டல்லவா இருக்கிறது!’ என்று நினைத்தார்.